

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங் குடியில் மக்கள் நலக்கூட்டியக்கத் தலைவர்கள் கூட்டாக செய்தி யாளர்களை நேற்று சந்தித்தனர்.
அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறும்போது, “ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், மத்திய அரசை எதிர்த்து மக்கள் நலக்கூட்டியக்கம் சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும்” என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறும்போது, “மீத்தேன் உள்ளிட்ட இயற்கை எரிவாயு திட்டங்கள் இயற்கை வளங்களை அழிப்பது டன், எதிர்கால சந்ததிக்கும் பாதிப்பை உருவாக்கும். இது போன்ற திட்டங்களை மக்கள் முழுமையாக எதிர்க்க வேண்டும்” என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறும்போது, “மாநில அரசையும், மக்களிடமும் ஆலோசிக்காமல் இத்திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து, மக்கள் போராடி வருவதை உணர்ந்து மத்திய அரசு இத்திட்டத்துக்கு மூடுவிழா நடத்த வேண்டும்” என்றார்.