திருநெல்வேலி அருகே பேருந்து நிலையத்தில் அண்ணன், தம்பி கொலை: பழிக்குப் பழியாக கும்பல் வெறிச் செயல்

திருநெல்வேலி அருகே பேருந்து நிலையத்தில் அண்ணன், தம்பி கொலை: பழிக்குப் பழியாக கும்பல் வெறிச் செயல்
Updated on
1 min read

திருநெல்வேலி அருகே பேருந்தில் அண்ணன், தம்பி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பழிக்குப் பழியாக இந்த கொலை நடந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், வீரவ நல்லூர் அருகே பத்மநாப நல்லூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி யன்(46). இவரது சகோதரர் மாரி யப்பன்(44). விவசாயிகளான இருவரும் கடந்த சில மாதங் களுக்கு முன் முக்கூடலில் கண்ணப்பன் என்பவர் கொலை வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்திருந்தனர்.

சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் ஆஜராகி இவர்கள் கையெழுத்திட்டு வந்தனர். நேற்று காலையில் அவர்கள் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு ஊருக்கு செல்வதற் காக சேரன்மகாதேவி பேருந்து நிலையத்துக்கு வந்தனர். அப் போது நாகர்கோவிலில் இருந்து சேரன்மகாதேவி வழியாக பாப நாசம் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறி வீரவநல்லூருக்கு வந்தனர்.

காத்திருந்த 3 பேர்

வீரவநல்லூர் பேருந்து நிலையத் தில் காலை 11.30 மணிக்கு பேருந்து வந்ததும், அதிலிருந்து மாரியப்பன் கீழே இறங்கினார். ஏற்கெனவே மோட்டார் சைக்கிளில் அங்குக் காத்திருந்த 3 பேர் கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் களுடன் பாய்ந்து சென்று மாரியப் பனை சரமாரியாக வெட்டியது. இதில் மாரியப்பன் தலை துண்டிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அரிவாளுடன் பேருந்துக் குள் புகுந்த கும்பல் இருக்கையி லிருந்து தப்பிக்க முயன்ற சுப்பிரமணியனையும் சரமாரியாக வெட்டியது. சம்பவ இடத்திலேயே அவரும் உயிரிழந்தார்.

இச்சம்பவத்தை அடுத்து பேருந் தில் இருந்த பயணிகளும், பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த பயணிகளும் ஓட்டம் பிடித்தனர். அப்பகுதியில் கடைகளும் உடனே அடைக்கப்பட்டன. அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மோட்டார் சைக்கிளில் 3 பேர் கும்பல் அங் கிருந்து தப்பியது.

போலீஸார் விசாரணை

இதுகுறித்து தகவல் கிடைத்த தும் மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர் விக்ரமன், சேரன் மகாதேவி டிஎஸ்பி ராஜேந்திரன், வீரவநல்லூர் இன்ஸ்பெக்டர் மதிய ழகன் மற்றும் போலீஸார் விசா ரணை நடத்தினர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.

போலீஸார் நடத்திய விசார ணையில் சுப்பிரமணியன், மாரியப் பனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கண்ணப்பன் என்பவருக்கும் இடையே வயல் தகராறு இருந்துள் ளது. இந்த மோதல் காரணமாக கண்ணப்பன் கொலை செய்யப் பட்டார். இந்த வழக்கில் மாரியப்ப னும், சுப்பிரமணியனும் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வந்தனர். இந்த கொலைக்கு பழிக்குக் பழி யாகவே அண்ணன், தம்பி கொலை செய்யப்பட்டனர் என போலீஸார் தெரிவித்தனர். 5 தனிப் படைகள் அமைத்து இந்த இரட்டைக் கொலை சம்பவத்தில் தொடர்பு உடையவர் களை தேடி வருவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார். அசம்பாவிதங்களைத் தடுக்க வீரவநல்லூர் வட்டாரம் முழுக்க போலீஸார் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in