Published : 10 Jun 2017 09:27 AM
Last Updated : 10 Jun 2017 09:27 AM

பல்வேறு பாடத்திட்டங்கள் இருக்கும்போது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து மட்டும் நீட் தேர்வுக்கான வினாக்கள் கேட்கப்படுவது ஏன்?

மருத்துவ கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

காட்டுமன்னார்கோயிலைச் சேர்ந்த டாக்டர் ராமச்சந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந் தார். அந்த மனுவில், “நீட் தேர் வுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படுவதால் அந்தப் பாடத் திட்டத்தில் படித்தவர்கள் மட்டுமே அதிக மதிப்பெண் பெறமுடியும். எனவே தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களும் பயன் பெறும் வகையில் மருத்துவ மாண வர் சேர்க்கைக்கு நீட் தேர்வு மதிப் பெண்ணுடன், பிளஸ் 2 மதிப்பெண் ணையும் சேர்த்து கணக்கிட உத்தர விட வேண்டும்’’ என்று கோரி யிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.பி.ராமன், ‘‘மனுதாரர் விடுத்துள்ள கோரிக்கையை பரிசீலிக்க முடி யாது என ஏற்கெனவே அவருக்கு பதிலளித்து விட்டோம். ஆகவே இந்த மனுவை முடித்து வைக்க வேண்டும்’’ என வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், “உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நாடு முழு வதும் மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு ஒரே மாதிரியாக நடத்தப்படுகிறது. ஆனால் நம் நாட்டில் பல்வேறு பாடத்திட்டங்கள் உள்ளன. தமிழகத்தில் கடந்த 2016-17-ல் 268 சிபிஎஸ்இ பள்ளிகளில் இருந்து 4 ஆயிரத்து 675 மாணவர்களும், 6 ஆயிரத்து 877 மாநில பாடத்திட்ட பள்ளிகளில் இருந்து 4 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்களும் நீட் தேர்வை எழுதியுள்ளனர். எனவே நீட் தேர்வு தொடர்பாக மாணவர்கள் மத்தியில் நிலவும் குழப்பமான சூழலைப் போக்கும் விதமாக கீழ்கண்ட கேள்விகளை கேட்க விரும்புகிறோம்.

நீதிபதியின் கேள்விகள்

பல்வேறு பாடத்திட்டங்கள் மூலமாக படித்த மாணவர்களின் அறிவுத்திறனை ஒரே ஒரு நீட் தேர்வின் மூலமாக சோதிக்க முடியுமா?

நீட் தேர்வுக்கான வினாக்கள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து மட்டும் கேட்கப்படுவது ஏன்? இது பிற பாடத்திட்ட மாணவர்களுக்கு கடினமாக இருக்காதா?

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படுவதால் 5 முதல் 10 சதவீதம் உள்ள சிபிஎஸ்இ மாணவர்கள் பெரும்பான்மையான இடங்களை ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள் என்பது உண்மையா?

பொதுவான தேர்வு எனும்போது போட்டி பொதுவானதாக இருக்க வேண்டும் என்பது அவசியமா? இல்லையா?

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், நீட் தேர்வை மட்டும் தகுதியாக வைத்து மாணவர்களை தேர்வு செய்ய முடியுமா?

பிளஸ் 2 மதிப்பெண் மற்றும் நீட் தேர்வு மதிப்பெண்ணை சரிசமமாக கணக்கிடாமல் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர்களை தேர்வு செய்வது எப்படி சரியாகும்?

நீட் தேர்வை தனியாக நடத்தா மல் பிளஸ் 2 பொதுத்தேர்வோடு இணைந்து நடத்தினால் தேவையற்ற காலவிரயம், மனக் குழப்பத்தை தவிர்க்கலாமா?

நீட் தேர்வுக்கு அதிமுக் கியத்துவம் அளிக்கப்படுவதால் தனியார் பயிற்சி மையங்கள் வணிக நோக்கில் காளான்கள் போல பெருகி விடாதா?

இயற்பியல், வேதியியல், உயிரி யியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுக்கு நாடு முழுவதும் ஏன் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை உருவாக்கக்கூடாது?

புதிய பாடத்திட்டத்தின்படி மாணவர்களுக்கு திறமையாக போதிக்க ஆசிரியர்களுக்கு ஏன் பயிற்சி அளிக்கக்கூடாது?

பாடத்திட்டங்களை மாற்றி யமைத்து நீட் தேர்வை எதிர்கொள்ளும் விதமாக மாணவர்களின் கல்வித்தரத்தை அதிகரிக்காமல், அதை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் தமிழக அரசு செயல்படலாமா?

நீட் தேர்வை தமிழக மாணவர்கள் பயமின்றி எதிர்கொள்ளும் வகையில் தரமான ஆசிரியர்களை தமிழக அரசு ஏன் நியமிக்கக்கூடாது?.

இந்த கேள்விகளுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் மத்திய, மாநில அரசுகள் வரும் ஜூன் 27-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும். மேலும் பொது நலன் கருதி இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி பரிந்துரைக்கிறோம்’’ என உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x