

ஆம்னி பஸ்ஸில் நடத்தப்பட்ட சோதனையில் முகவரி இல்லாமல் அனுப்பப்பட்ட 20 கிலோ வெள்ளி கொலுசுகள், 200 செல்போன்கள், 55 குத்துவிளக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை ஜிஎஸ்டி சாலையில் மீனம்பாக்கம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி காத்தவரா யன் தலைமையில் சோதனை நடத் தப்பட்டது. அப்போது சென்னையில் இருந்து மதுரை நோக்கி சென்ற ஒரு ஆம்னி பஸ்ஸை நிறுத்தி சோதனையிட்டனர். பஸ்ஸின் மேலே பார்சல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதியில் பெயர், முகவரி எதுவும் இல்லாமல் ஒரு பார்சல் இருப்பதை கண்டுபி டித்தனர். அதனைத் திறந்து பார்த்தபோது அதில் 20 கிலோ வெள்ளிக் கொலுசுகள் இருந்தன. அதனுடன் 200 செல்போன்கள் மற்றும் 55 வெள்ளிக் குத்துவிளக்கு களும் இருந்தன. இவை எதிலும் முகவரி இல்லை. உடனடியாக அனைத்தையும் பறக்கும் படையி னர் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து டிராவல்ஸ் நிறுவனத்தின் மேலாளர் முத்துராமனிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த பார்சல் பற்றிய விவரங்களை தருமாறு அவரிடம் அதிகாரிகள் கேட்டுள்ளனர்.