Published : 11 Mar 2017 08:57 AM
Last Updated : 11 Mar 2017 08:57 AM

‘தி இந்து’வின் ‘பெண் இன்று’ இணைப்பிதழ் சார்பில் சென்னையில் நாளை மகளிர் திருவிழா: பிரபலங்கள் பங்கேற்பு; ஏராளமான போட்டிகள், பரிசுகள்

‘தி இந்து’வின் ‘பெண் இன்று’ இணைப்பிதழ் சார்பில் சென்னையில் நாளை மகளிர் திருவிழா நடக்க உள்ளது. ஏராளமான போட்டிகள், பரிசுகள், கலை நிகழ்ச்சிகளுடன் நடக்கும் இத்திருவிழாவில் பிரபலங் கள் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்து கின்றனர்.

‘தி இந்து’ தமிழ் நாளிதழுடன் ஞாயிறுதோறும் டேப்லாய்டு வடி வில் 16 பக்க வண்ணமயமான இணைப்பாக ‘பெண் இன்று’ வெளியாகிறது. பெண்களின் வாழ்க் கைக்கு வழிகாட்டும் பல்வேறு அம்சங்களுடன் வெளியாகும் இந்த இணைப்பிதழ் சார்பில், தமிழகத்தில் நெய்வேலி, மதுரை, திருச்சி, ஈரோடு, திருநெல்வேலி ஆகிய நகரங்களைத் தொடர்ந்து சென்னையில் 2-வது ஆண்டாக மகளிர் திருவிழா 12-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை (நாளை) நடக்கிறது.

பிரத்யேகத் திருவிழா

சென்னை தி.நகர் பாண்டிபஜாரில் உள்ள விஜயா மஹாலில் (பழைய நாகேஷ் தியேட்டர்) மகளிர் திருவிழா காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இது பெண்களுக்கான பிரத்யேகத் திருவிழா. சிந்தனைக்கு விருந்தளிக் கும் நிகழ்ச்சிகள், அசத்தலான போட்டிகள், ஆச்சரியமூட்டும் பரிசுகள் என ஏராளமாக நிகழ்ச்சிகளுடன் நாள் முழுவதும் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பெண்களுக்கான சட்டங் கள் குறித்து வழக்கறிஞர் பி.எஸ்.அஜிதாவும், ‘பெண்களால் எல்லாம் முடியும்’ என்ற தலைப்பில் பேராசிரியர் பர்வீன் சுல்தானாவும் சிறப்புரையாற்றுகின்றனர். பெண் கள் மீதான வன்முறைகளை எதிர்கொள்வது எப்படி என்று வாசகி களுடன் முன்னாள் கூடுதல் ஆணையர் திலகவதி கலந்துரையாடுகிறார்.

மாற்று ஊடக கலைக் குழுவின ரின் பறையாட்டம், சாட்டைக்குச்சி ஆட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமிய நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

விழாவில் பங்கேற்கும் வாசகிகள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படும். வசனமில்லா நாடகம், கோலப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும், நிமிடத்துக்கு நிமிடம் ஏராளமான பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

ஏராளமான பரிசுகள்

இந்த நிகழ்ச்சியை ‘தி இந்து’ தமிழ் நாளிதழுடன் இணைந்து லலிதா ஜுவல்லரி, சென்னை சில்க்ஸ், பொன்வண்டு சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் பவுடர், எவர்வின் குரூப் ஆஃப் ஸ்கூல்ஸ், மந்த்ரா, செப்ரானிக்ஸ்,  ஐஸ்வர்யா புடவைகள், மாம்பலம் ஐயர்ஸ், கரூர் ஹெச் டூ ஹெச் ஆரஞ்ச் இம்பெக்ஸ், ஹெல்த் பேஸ்கட், மை ட்ரீம்ஸ், நாயுடுஹால், பொன்மணி வெட்கிரைண்டர், டேஸ்ட்டி, ஹெல்ட்டா செக்கு நல்லெண்ணெய், ஸ்பிக்டெக்ஸ், வானசா ஸ்மார்ட் சானிட்டரி நாப்கின்ஸ், பி வெல் மருத்துவமனை, ரூபி பில்டர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன.

மகளிர் திருவிழா கொண்டாட் டத்தில் பெண்கள் திரளாகப் பங்கேற்று, மகிழ்வோடு பரிசுகளை அள்ளிச்செல்லும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள அன்போடு அழைக்கிறோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x