உமா மகேஸ்வரி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் உத்தரவு

உமா மகேஸ்வரி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் உத்தரவு
Updated on
1 min read

சென்னை சிறுசேரியில் கொலை செய்யப்பட்ட பெண் இன்ஜினீயர் உமா மகேஸ்வரியின் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: "காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டம், ஏகாட்டுர் கிராமம்,சிப்காட் நிறுவன தொழில்நுட்ப வளாக எல்லையிலுள்ள முட்புதரில் சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரின் மகள் உமாமகேஸ்வரியின் சடலம் 22.2.2014 அன்று கண்டெடுக்கப்பட்டது.

உயிரிழந்த உமாமகேஸ்வரியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக எஞ்சியுள்ள குற்றவாளிகளையும் விரைந்து கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறையினருக்கு ஆணையிடப்பட்டுள்ளது." இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in