சசிகலாவுக்கு ஆதரவான காவல்துறை அதிகாரிகளின் பட்டியல் தயாரிப்பு: முக்கிய அதிகாரிகள் விரைவில் இடமாற்றம்

சசிகலாவுக்கு ஆதரவான காவல்துறை அதிகாரிகளின் பட்டியல் தயாரிப்பு: முக்கிய அதிகாரிகள் விரைவில் இடமாற்றம்
Updated on
2 min read

சசிகலா ஆதரவு காவல்துறை அதிகாரிகளின் பட்டியல் தயாரிக் கப்பட்டுள்ளது. அவர்கள் விரை வில் இடமாற்றம் செய்யப்பட வுள்ளனர்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுகவில் ஏற்பட் டுள்ள உட்கட்சி பிரச்சினை தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிக லாவை எதிர்த்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி நடவ டிக்கைகளை எடுத்து வருகிறார். அவரது நடவடிக்கைகளுக்கு காவல் துறையின் ஆதரவு மிக முக்கியம். ஆனால் தமிழக காவல் துறையில் பல அதிகாரிகள் சசிகலாவின் ஆதரவாளர்களாக உள்ளனர். அவர்கள் மூலம் அரசின் நடவடிக்கைகள் அனைத் தும் முன்கூட்டியே சசிகலா தரப்புக்கு தெரிந்துவிடுவதாக கூறப்படுகிறது. இதனால் காவல் துறையை முதலில் தனது கையில் எடுக்க முதல்வர் ஓ.பன் னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து காவல் துறை தலைமை அதிகாரி ஒருவர் கூறும்போது, “போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீடு, நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

போயஸ் கார்டன் வீட்டில் தற்போது அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா வசித்து வருகிறார். எனவே, அந்த வீட்டை அரசு கைப்பற்றுவதற்கு காவல் துறையின் உதவி தேவை. ஜெயலலிதாவின் மரணம் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் அறிவித் துள்ளார். இந்த விசாரணை முறையாக நடப்பதற்கும் காவல் துறையின் உதவி தேவை.

தற்போது சசிகலா தரப்பினர் சுமார் 80 எம்.எல்.ஏக்களை தங்களது கட்டுப்பாட்டில் ஹோட் டல்களில் தங்க வைத்து, அவர் களை யாரும் தொடர்புகொள்ள முடியாதபடி செய்துள்ளனர். இந்த எம்.எல்.ஏக்களை வெளியே கொண்டுவருவதற்கும் காவல் துறையின் உதவி தேவை.

அரசின் நடவடிக்கைகள் அனைத்தையும் செயல்படுத்து வதற்கு காவல் துறையின் உதவி தேவைப்படுவதால், தங்களது சொல்படி நடக்கும் அதிகாரிகளை முக்கிய பொறுப்புகளில் அமர்த்த ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார். இதற்காக முக்கிய பொறுப்புகளில் இருக்கும் சசிகலா ஆதரவு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய முடிவு செய்து, அவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு, அந்த இடங்களில் அரசு ஆதரவு அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்” என்றார்.

இந்நிலையில், சென்னை பெருநகர காவல் ஆணையராக இருக்கும் எஸ்.ஜார்ஜ் மாற்றப் பட்டு, அந்த இடத்துக்கு காவல் துறை தலைமையிடத்து நிர்வாக பொறுப்பில் இருக்கும் சஞ்சய் அரோரா நியமிக்கப்பட இருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகின. ஆனால், இட மாற்றத்துக்கு அனுமதி அளிக்க வேண்டிய காவல் துறை தலைமையிட முக்கிய அதிகாரி ஒருவர் தாமதப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. அந்த தலைமை யிட அதிகாரி சசிகலாவின் ஆதரவு அதிகாரி என்றும் கூறப்படுகிறது. இதனால் காவல் துறையை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் ஓரிரு நாட்களில் மாற்றப்பட இருப்பதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதை உறுதி செய்யும் வகையில், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் நேற்று காலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து தமிழக நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in