

மூலப்பொருட்கள் விலையேற்றம் காரணமாக தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் 120 தீப்பெட்டி தொழிற்சாலைகள் நேற்று முதல் மூடப்பட்டன. இதனால் சுமார் 1 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான அட்டை, பேப்பர், குச்சி, மெழுகு போன்ற மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. இதனால் தீப்பெட்டி யின் அடக்கச்செலவு அதிகரித்துள் ளது. இந்நிலையில் தீப்பெட்டிக்கு வடமாநில மார்க்கெட்டில் கட்டுபடி யான விலை கிடைக்கவில்லை. எனவே தமிழகம் முழுவதும் தீப் பெட்டி ஆலைகளில் உற்பத் தியை ஒரு வாரம் நிறுத்த உற்பத்தி யாளர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில், சுமார் 120 பகுதி இயந்திர தீப்பெட்டி ஆலைகள் மற்றும் சுமார் 600 ஜாப் ஒர்க் நிறுவனங்கள் நேற்று முதல் மூடப்பட்டுள்ளன. வரும் 26-ம் தேதி வரை ஆலைகளை தொடர்ந்து மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தீப்பெட்டி ஆலைகள் மற்றும் ஜாப் ஒர்க் நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் 1 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.