

புதுச்சேரி சட்டப்பேரவை தற்காலிக தலைவராக சிவக்கொழுந்து எம்எல்ஏ நியமிக்கப்பட்டுள்ளார். அவர் எம்எல்ஏக்களுக்கு நாளை பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரி மாநில முதல்வராக நாராயணசாமி, 5 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதை தொடர்ந்து தற்காலிக சபாநாயக ராக லாஸ்பேட்டை தொகுதி எம்எல்ஏ சிவக்கொழுந்தை தேர்வு செய்து, முதல்வர் நாராயணசாமி துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு அனுப்பினார். அவரும் அதை ஏற்று சிவக்கொழுந்தை தற்காலிக சபாநாயகராக நியமித்து ஆணை பிறப்பித்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிவகொழுந்துவுக்கு இன்று காலை 11 மணிக்கு ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்தில் கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். அதை தொடர்ந்து நாளை காலை சட்டப்பேரவையில் புதிய உறுப்பினர்கள் அனைவருக்கும் சிவக்கொழுந்து பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.