அர்ப்பணிப்பு, நேர்மையுடன் பணியில் வெளிப்படையாக இருங்கள்: ஐஏஎஸ் தேர்வர்களுக்கு ஆளுநர் ரோசய்யா அறிவுரை

அர்ப்பணிப்பு, நேர்மையுடன் பணியில் வெளிப்படையாக இருங்கள்: ஐஏஎஸ் தேர்வர்களுக்கு ஆளுநர் ரோசய்யா அறிவுரை
Updated on
1 min read

பணியில் அர்ப்பணிப்பு, நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆளுநர் ரோசய்யா அறிவுரை வழங்கினார்.

சென்னை ஆர்.ஏ.புரம் எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில், குடிமைப் பணி தேர்வு 2015-ல் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழா நடந்தது. இதில் ஆளுநர் கே.ரோசய்யா பேசியதாவது:

குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்றுள்ள நீங்கள், இந்த மாநிலம் மற்றும் நாட்டுக்காக சேவை செய்ய பணிக்கப்பட்டுள்ளீர்கள். பொதுமக்களின் நலனுக்காக உங்களை நீங்கள் அர்ப்பணிக்க வேண்டும். இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. இந்த நாடாளு மன்ற ஜனநாயகத்தில் குடிமைப் பணி முறை என்பது நிர்வாக அமைப்பின் முதுகெலும்பாகும்.

நிர்வாகத்தை நடத்திச் செல்லும் பணி, குடிமைப்பணிக்கு தேர்வானவர்களுக்கு அளிக்கப் பட்டுள்ளது. பணியில் அர்ப்பணிப் புடனும் நேர்மையுடனும் செயல் பட வேண்டும். மேலும் வெளிப் படைத் தன்மையுடன், யாரிடமும் பாகுபாடு காட்டாமல் பணியாற்ற வேண்டும்.

கிராமப்புறம், நகர்ப்புறம் மற்றும் பாலின வேறுபாடுகளை முதலில் களைய வேண்டும். சமூக பொருளாதார ஒற்றுமைக்காக பாடுபட வேண்டும். நேர்மறை சிந்தனை, நல்ல நிர்வாகம், ஒருங் கிணைந்த குழுப்பணி முயற்சி இவற்றை கொண்டிருந்தால் மட்டுமே மக்களுக்கு சிறப்பாக பணியாற்ற முடியும்.

அரசு ஊழியர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசும் போது, "அரசுத் துறையை நடத்திச் செல்வது மட்டுமே நமது பணியல்ல. புதிய, நவீன விஷயங்களை துறையில் கொண்டுவர வேண்டும். சிறந்த நிர்வாகியாக இருந்தால் மட்டும் போதாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையிலும் மாற்றத்துக்கான முகவராக இருக்க வேண்டும்" என கூறியுள்ளார். எனவே, நீங்கள் எங்கு பணியாற்றினாலும் மக்கள், நாட்டின் மேம்பாட்டுக்காக நவீனம் மற்றும் புதிய விஷயங்களை கொண்டுவாருங்கள்.

இவ்வாறு ரோசய்யா பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in