சிறையில் வைகோவுக்கு முதல் வகுப்பு

சிறையில் வைகோவுக்கு முதல் வகுப்பு
Updated on
1 min read

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோவுக்கு முதல் வகுப்பு வழங் கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கடந்த 2009-ம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து வைகோ மீது தேசத்துரோக வழக்கு பதியப் பட்டது.

இந்த வழக்கில் வைகோ நேற்று முன்தினம் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி சரண் அடைவதாக தெரி வித்தார். வைகோவிடம் மாஜிஸ்தி ரேட்டு கோபிநாத் சொந்த ஜாமீனில் செல்லுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் ஜாமீனில் செல்ல விரும்ப வில்லை என்றும், சட்டப்படி நட வடிக்கை எடுத்து தன்னை சிறையில் அடைக்க உத்தரவிடும்படியும் கேட் டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து வரும் 17-ம் தேதி வரை 15 நாட்கள் வைகோவை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட் டார். இதையடுத்து வைகோ புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட் டார். புழல் சிறையில் அரசியல் தலைவர்கள் அடைக்கப்படும் முதல் வகுப்பு பிளாக்கில் வைகோ தற்போது அடைக்கப்பட் டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in