எம்.பி., எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிட தகுதித் தேர்வு: இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

எம்.பி., எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிட தகுதித் தேர்வு: இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்
Updated on
2 min read

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகள் வெளிநடப்புகள், கூச்சல், குழப்பங் கள் இல்லாமல் சுமுகமாக நடை பெற எம்.பி., எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிடுவோருக்கு தகுதித் தேர்வு நடத்தும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் உரிய சட்டத்திருத்தம் கொண்டுவர வேண் டும் என இந்திய தேர்தல் ஆணையத் துக்கு பாரதியார் சிந்தனையாளர் மன்றம் கடிதம் அனுப்பியுள்ளது.

இந்தியாவில் மக்கள் பிரதிநிதித் துவச் சட்டம் 1950, நடத்தைச் சட்டம் 1961 அடிப்படையில் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை தேர்தல் கள் நடத்தப்படுகின்றன. 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்திய குடி மகன்களுக்கும் தேர்தலில் வாக் களிக்க உரிமை வழங்கப்பட் டுள்ளது. வாக்குரிமை உள்ளவர் களில் 25 வயது நிரம்பியவர்கள் எம்எல்ஏ தேர்தலிலும், 30 வயது நிரம்பியவர்கள் எம்.பி. தேர்தலிலும் போட்டியிட முடியும். தேர்தலில் போட்டியிட தனியாக கல்வித் தகுதி எதுவும் கிடையாது.

இந்நிலையில் எம்.பி., எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிடுவோருக்கு தகுதித்தேர்வு நடத்த வேண்டும். அதில் வெற்றி பெற்றவர்களை மட்டுமே தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என இந் திய தேர்தல் ஆணையத்துக்கு சுப்பிரமணிய பாரதியார் சிந்தனை யாளர்கள் மன்றத்தின் செயலர் ஆர்.லெட்சுமி நாராயணன் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப் பதாவது:

நாடாளுமன்றம், சட்டப்பேர வையின் நடைமுறைகள் தெரியாத வர்கள் எம்பி, எம்எல்ஏக்களாக தேர்வு செய்யப்படுகின்றனர். இவர் களுக்கு ஆளுநர், சபாநாயகர், மாநிலங்களவை துணைத் தலைவ ரின் அதிகாரங்கள் குறித்து தெரிவ தில்லை. இதனால் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன் ஒவ்வொரு வரும் குடியரசுத் தலைவர், ஆளுநர், சபாநாயகர், மாநிலங்களவை துணைத் தலைவர் ஆகியோரின் அதிகாரங்கள் என்ன என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

தேர்வு நடத்த வேண்டும்

இதற்காக தேர்தலில் போட்டியிட விரும்புவர்களுக்கு தேர்தல் ஆணையம் தனித் தேர்வு நடத்த வேண்டும். எம்எல்ஏ தேர்தலில் போட்டியிடுவோருக்கு ஆளுநர், சபாநாயகர், எம்எல்ஏக்களின் அதி காரங்கள், கடமைகள் குறித்து தேர்வு நடத்தி, அதில் 35 மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி சான்றிதழ் வழங்க வேண்டும். அந்த தேர்ச்சி சான்றிதழ் சமர்ப்பிப்பவர்களை மட் டுமே தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும்.

எம்பி தேர்தலில் போட்டியிடு வோருக்கு குடியரசுத் தலைவர், சபாநாயகர், எம்பிக்கள் மற்றும் மாநிலங்களவை தலைவர் ஆகியோ ரின் அதிகாரங்கள், கடமைகள் குறித்து தேர்வு நடத்தி, இதில் 40 மதிப்பெண் பெறுபவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும்.

இந்த தகுதித் தேர்வுக்கான வினாத்தாள் தாய் மொழியில் வழங்க வேண்டும். இந்த தேர் வுக்கு தேவையான புத்தகங்களை தேர்தலில் போட்டியிட விரும்புவர் களுக்கு தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும். இந்த தேர்வில் வெற்றிபெற்று எம்பி, எம்எல்ஏவாக தேர்வு செய்யப்படுபவர்களால் நாடாளுமன்றம், சட்டப்பேரவைகள் வெளிநடப்பு, கூச்சல் குழப்பம் இல்லாமல் சுமுகமாக நடைபெறும். இதற்காக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் தேவையான சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in