Published : 07 Jun 2017 08:47 AM
Last Updated : 07 Jun 2017 08:47 AM

எம்எல்ஏக்களுடன் முதல்வர் திடீர் ஆலோசனை: ஆட்சிக்கு மிரட்டல் இல்லை என அமைச்சர் டி.ஜெயக்குமார் தகவல்

அதிமுகவில் டிடிவி தினகரன் தலைமையில் தனி அணி உருவாகி யுள்ள நிலையில், 8 மாவட்ட எம்எல்ஏக்களுடன் முதல்வர் பழனிசாமி திடீரென ஆலோசனை நடத்தினார். தினகரனால் ஆட்சிக்கு எந்த மிரட்டலும் இல்லை என அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

அதிமுக அம்மா கட்சியில் இருந்து டிடிவி தினகரன் மற்றும் அவரைச் சார்ந்தவர்களை ஒதுக்கி வைக்கும் முடிவில் உறுதியாக இருப்பதாக அமைச்சர் டி.ஜெயக் குமார் நேற்று முன்தினம் அறிவித் தார். இந்நிலையில், சென்னை அடையாறில் உள்ள வீட்டில் தின கரனை செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாசலம், பழனியப்பன், வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல் வன், ராஜன் செல்லப்பா, இன்ப துரை உள்ளிட்ட 27 எம்எல்ஏக்கள் நேற்று சந்தித்து ஆலோசனை நடத் தினர். இதனால், முதல்வர் பழனி சாமி தரப்பு அதிர்ச்சி அடைந்தது.

இதையடுத்து, 10 மாவட்ட எம்எல்ஏக்களை முதல்வர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதன்படி, மாலை 3 மணி முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள் ளூர், விழுப்புரம், திருவண்ணா மலை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள் முதல்வரை சந்தித்து பேசினர். மற்ற மாவட்ட எம்எல்ஏக்களை இன்றும் நாளையும் முதல்வர் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஜெயக்குமார், மயிலாப்பூர் ஆர்.நடராஜ், விருகம் பாக்கம் என்.ரவி, பெரம்பூர் வெற்றி வேல் ஆகியோர் முதல்வரை சந்தித்தனர். இந்த சந்திப்பு குறித்து வெற்றிவேல் கூறும்போது, ‘‘முதல் வரை மரியாதை நிமித்தமாகவும், தொகுதி பிரச்சினை தொடர்பாகவும் சந்தித்தேன். ஆட்சிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை’’ என்றார்

எம்எல்ஏக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு முடிந்தது. அதன் பிறகு நிருபர்களுக்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் அளித்த பேட்டி:

முதல்வருடனான சந்திப்பில் எது குறித்து ஆலோசிக்கப்பட்டது?

இந்த அரசை முதல்வர் கே.பழனி சாமி சிறப்பான முறையில் வழி நடத்தி வருகிறார். சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டங்களையும் சேர்ந்த பேரவை உறுப்பினர்களை அழைத்து முதல்வர் பேசி வரு கிறார். இன்று 8 மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை அழைத்துப் பேசி னார். அவர்கள் தங்கள் தொகுதி களில் நிலவும் பிரச்சினைகள் குறித்து தெரிவித்தனர். அதன் அடிப் படையில் எல்லா தொகுதிகளிலும் பணிகள் நிறைவேற்றப்பட வேண் டும். குறிப்பாக அடிப்படை கட்ட மைப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண் டும் என முதல்வர் உத்தரவிட்டார்.

அரசுக்கு ஏதேனும் பிரச்சினை உள்ளதா?

அரசுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. 2021 வரை ஆட்சி தொடரும். முதல்வர் கே.பழனிசாமி 2021 வரை முதல்வராக தொடர்வார். அதன்பின் மக்களை சந்தித்து அதிமுகவே மீண்டும் ஆட்சி அமைக்கும்.

உங்கள் மீது நடவடிக்கை எடுக் கப்படும் என்று தங்க தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ கூறியுள்ளாரே?

நண்பர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியதை யாரும் பொருட்படுத்த தேவையில்லை. அதை மறந்து விடுங்கள்.

எம்எல்ஏக்கள் பலர் தினகரனை சந்தித்துள்ளனர். இதன்மூலம் அரசுக்கு மிரட்டல் உள்ளதா?

தனிப்பட்ட முறையில் அவர் கள் சந்தித்திருப்பார்கள். அதை அரசியலாக்கக் கூடாது. நிலையான ஆட்சி நடக்கிறது. இந்த அரசுக்கு எந்த மிரட்டலும் இல்லை.

அதிமுக பொதுச்செயலாளர் சிறை யில் உள்ளார். துணைப் பொதுச் செயலாளரை ஒதுக்கிவிட்டதாக கூறியுள்ளீர்கள். தற்போது அதிமுக வுக்கு தலைமை யார்?

ஏற்கெனவே கட்சியில் வழி காட்டும் குழு உள்ளது. அந்த குழுவால் கட்சி வழிநடத்தப்படு கிறது. அதனால் எந்தப் பிரச்சினை யும் இல்லை. ஆட்சியை முதல்வர் பழனிசாமி வழிநடத்துகிறார். தமி ழக மக்களுக்கு இந்த அரசில் எல்லாவித நன்மைகளும் கிடைக் கிறது. சிலருக்கு கவலை இருக்கிறது அது தொடர்பாக நான் எதையும் தெரிவிக்கவில்லை.

அரசுக்கு தற்போது பெரும் பான்மை உள்ளதா?

இந்த அரசுக்கு பெரும்பான்மை உள்ளது. தினகரனை எம்எல்ஏக்கள் சந்தித்தது அவர்களது சொந்த விருப்பத்தின் பேரில்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x