Last Updated : 02 Jan, 2017 10:07 AM

Published : 02 Jan 2017 10:07 AM
Last Updated : 02 Jan 2017 10:07 AM

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கூட்டமாக வலசை செல்லும் சூறைக்குருவிகள்: அறிவோம் அறிவிப்போம் சூழலியல் ஆய்வில் தகவல்

தமிழகத்தில் வயல்வெளிகள் குறைந்து வருவதால் சூறைக்குருவிகள் இலங்கைக்கு அலை அலையாக வலசை செல்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

பறவையியலாளர்கள், சூழலி யல் செயல்பாட்டாளர்கள், இயற் கையியலாளர்கள் இணைந்து ‘அறிவோம் அறிவிப்போம்’ என்ற சூழலியல் அமைப்பை உருவாக்கி தமிழகத்தில் உள்ள கடல், மலைகள், காடுகள், ஏரிகளில் வாழும் பறவைகள், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வலசை வந்து போகும் பறவைகள், பூச்சிகள் குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த ஆய்வில் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு சூறைக்குருவிகள் வலசை செல்வது (சீசனுக்காக செல்வது) தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ‘அறிவோம் அறிவிப் போம்’ சூழலியல் அமைப்பின் நிறுவனரும் பறவையியலாளரு மான பாலா பாரதி ‘தி இந்து’ விடம் கூறியதாவது: சூறைக்குருவி யானது மைனாவின் அளவுடனும், கருந்தலையுடனும் காணப்படும் பறவையாகும். இதன் உடல் இளஞ் சிவப்புடன் உள்ளதால் ரோசா மைனா எனவும் அழைப்பர். அலகும், கால்களும் செம்மஞ்சள் நிறத்துடன் இருக்கும். இவை மரத்தில் அடை யும் பேஸ்ஸரின் வகை (Passerine Birds) பறவைகள் ஆகும்.

இவை நமது மைனாவுக்கு தூரத்து சொந்தமான சடர்னிடே குடும்பத்தைச் சேர்ந்த, சுற்றுப்புறத் தில் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தும் இயல்புள்ளவையாகும். ஆயிரக்கணக்கில் கூட்டமாக வந்து உணவுத் தேடுவதால் சூறை யாடுதல் எனும் பொருள்படும்படி சூறைக்குருவி என அழைக்கப் படுகிறது. இவை சோளக்காடுகளில் அதிகம் தென்படுவதால் சோளக்குருவி எனவும் சோளப்பட்சி எனவும் அழைக்கப்படுகின்றன.

பயிர்களுக்கு கேடுவிளைவிக் கும் வெட்டுக்கிளி, சிறிய பூச்சிகளை இவை உணவாக உட்கொள்வதால் விவசாயிகளுக்கு நன்மையும் செய்கின்றன. இவற்றுக்கு பிடித்த உணவு லோகஸ்ட் (Locust) வகை வெட்டுக்கிளிகள். அதனால்தான், லோகஸ்ட்கள் அதிகம் இனப்பெருக்கமடையும் மே, ஜூன் மாதத்திலேயே இவையும் குஞ்சு பொரிக்கின்றன.

கி..கி..கி... எனக் குரல் கொடுத்துக்கொண்டு கூட்டமாக வாழும் இவை, கூடு கட்ட ரொம்பவெல்லாம் மெனக்கெடுவதில்லை. தரையி லுள்ள பள்ளங்களிலும், மரப் பொந்துகளிலும் வெளிர்நீல நிறத்தில் மூன்றில் இருந்து ஆறு முட்டைகள் வரை இட்டு ஆண், பெண் என இரண்டு பறவைகளும் சேர்ந்தே அடைகாக்கும். பெரும்பாலும் திறந்தவெளி புல்வெளிகளில் காணப்படும்.

பறவையியலாளர் பாலா பாரதி

இவற்றின் சிறப்பியல்புகளுள் ஒன்று, இவை கூட்டமாகப் பறக்கும் போது மேகம் போல் பெருந்திரள் களாக ஒன்றிணைந்து ஏற்படுத்தும் ஒத்திசைவு வடிவங்கள். ஆயிரக் கணக்கில் சேர்ந்துப் பறக்கும் இவை வானில் பல வடிவங்களில் தோற்றத்தை ஏற்படுத்தி பார்பவர்களை வியப்பில் ஆழ்த்தும். நொடிக்கு நொடி வடிவங்களை மாற்றிக்கொண்டே பறப்பதற்கான காரணம் புதிராகவே உள்ளது. எதிரிகளைக் குழப்பத்தில் ஆழ்த்தி தப்பிப் பிழைக்கும் உத்தியாகவும் இருக்கலாம். பார்ப்பவர்களின் கற்பனைக்கு தக்கவாறு இவற்றின் உருவங்களைக் குறிப்பிடுவர்.

இந்தியாவில் குளிர்காலத்தில் பறவைகளின் வலசையை சூறைக் குருவியே தொடங்கி வைப்பதாக பறவையியலின் தந்தையான சலீம் அலி குறிப்பிட்டுள்ளார். தமிழகத் தில் வயல்வெளிகள் குறைந்து வருவதால் சூறைக்குருவிகள் இலங்கைக்கு வலசை செல்வது தற்போது அதிகரித்துள்ளது என்றார்.

மேலும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வன உயிர் புகைப்படக் கலைஞர் மயுரப்பிரியன் கூறியதா வது: இலங்கையில் அம்பாந் தோட்டை, புத்தளம், கட்டுநாயக்க உள்ளிட்ட பகுதிகளில் பெருங்கூட்ட மாகப் பறக்கும் சூறைக்குருவி களைப் பார்க்க முடிகிறது. இலங்கைக்கு வலசை வரும் இந்தப் பறவைகள் இங்கு கூடுகட்டிக் குடி யிருப்பதில்லை. பிப்ரவரி அல்லது அதிகபட்சமாக மார்ச் மாதம் வரை இலங்கையில் சுற்றித் திரிகின்றன.

இந்த சூறைக்குருவிகளை வரவழைக்க வயல்வெளிகளில் செயற்கைக் கூண்டுகளை அமைத்து பயிர்களுக்குத் தீங் கிழைக்கும் வெட்டுக்கிளிகளைப் பிடிக்கவும் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்வார்கள் என்றார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x