

தமிழகம் முழுவதும் இன்று (வியாழக்கிழமை) சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கடந்த 2004-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி சுனாமி தாக்கியது.
இதில் சென்னை, நாகை, உள்ளிட்ட கடற்கரை பகுதியில் 7000-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். டிசம்பர் 26 ஆண்டு தோறும் சுனாமி நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இன்றும் சென்னை, நாகை, திருநெல்வேலியில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில் சுனாமியில் பலியான தங்கள் உறவுகளை நினைவு கூறும் வகையில் பலர் கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர்.
நெல்லை மாவட்டம் இடிந்தகரையிலும் கூட்டுப் பிரார்த்தனையும், பின்னர் கடலில் பால் ஊற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.