

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடிவடைந்ததை அடுத்து, கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் சயான் நேற்று கைது செய்யப்பட்டார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட் பங்களாவில், கடந்த ஏப்ரல் 24-ம் தேதி காவலாளி கொலை செய்யப்பட்டதுடன், கொள்ளை சம்பவமும் நடந்தது. இது தொடர்பாக 11 பேரை போலீஸார் தேடி வந்தனர்.
இவர்களில் கனகராஜ் என்பவர், ஏப்.28-ம் தேதி சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே விபத்தில் சிக்கி பலியானார். மறுநாளே, மற்றொரு நபரான சயான்(35), கேரள மாநிலத்தில் விபத்தில் சிக்கினார். மனைவி, குழந்தை இறந்துவிட்ட நிலையில், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவர் பாலக்காடு அரசு மருத்துவமனையிலும், பின் னர் கோவையில் தனியார் மருத் துவமனையிலும் அனுமதிக்கப் பட்டார்.
தனியார் மருத்துவமனையில் 17 நாட்கள் சிகிச்சை பெற்றதையடுத்து, போலீஸார் பரிந்துரைப்படி, கடந்த 17-ம் தேதி கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, போலீஸார் பாதுகாப்பில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேற்கண்ட வழக்குகளில் தேடப் பட்ட 9 பேர் பிடிபட்டுள்ள நிலை யில், சயானிடம் விரைந்து விசா ரணை நடத்த வேண்டிய சூழ லுக்கு தனிப்படை போலீஸார் தள்ளப்பட்டனர்.
இந்நிலையில், 20 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு, கோவை அரசு மருத்துவமனையில் இருந்து நேற்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். உதகை கூடுதல் துணைக் கண்காணிப்பாளர் பாஸ் கரன் தலைமையிலான போலீஸார், நேற்று சயானை கைது செய்து நீலகிரி மாவட்டத்துக்கு அழைத்துச் சென்றனர்.
கோத்தகிரி காவல் நிலையத்தில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பிறகு, கோத்த கிரி நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவரை, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, கோவை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
இதுபற்றி போலீஸார் கூறும் போது, “வழக்கில் தொடர்புடைய 10 பேரும் கைது செய்யப்பட்ட நிலை யில் போலீஸ் விசாரணை நிறை வடைந்துள்ளது. இனி, நீதிமன்ற விசாரணை தொடங்கும்” என்றனர்.