

அதிகாரிகள் 100 சதவீதம் ஒத்துழைப்பு கொடுப்பதால் புதுச்சேரியை விட்டு வெளியேற மாட்டேன் என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப் பேற்று 100 நாட்கள் நிறைவடைந் துள்ளது. இதையடுத்து ஆளுநர் மாளிகையின் செயல் பாடுகள் குறித்து செய்தியாளர் களுக்கு நேற்று மாலை விளக்க மளிக்கப்பட்டது.
அப்போது வார இறுதி நாட்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள், அதிகாரிகளுடனான சந்திப்புகள், பொதுமக்கள் சந்திப்பு ஆகியவற்றின் மூலம் களையப்பட்ட பிரச்சினைகள் குறித்து அதிகாரிகள் திரையிட்டு விளக்கினர். அப்போது தலைமை செயலாளர் மனோஜ் பரிதா, ஆட்சியர் சத்தியேந்திர சிங் துர்சாவத், அரசு செயலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் கிரண்பேடி பேசிய தாவது: மிகவும் பயனுள்ள வகையில் புதுச்சேரி சட்டப் பேரவைக் கூட்டத்தொடர் நிறைவடைந்துள்ளது. ஆளுநர் மாளிகையால் மேற்கொள்ளப் படும் பணிகளில் அனைத்து அதிகாரிகளின் பங்களிப்பும் உள்ளது. பத்திரிக்கைகளில் வரும் செய்திகள் அனைத்தும் ஆராயப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. எங்கள் செயல் பாடுகளை மக்கள் அறிந்தால் அவர்களும் புதுச்சேரியை தூய்மையாக வைத்திருக்க முயற்சி செய்வார்கள்.
புதுச்சேரியில் உள்ள அனைத்து மாணவர்களும் தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்தால் புதுச்சேரி தூய்மையாக மாறிவிடும். இது தொடர்பாக கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
புதுச்சேரி முதல்வர் நாராயண சாமியுடன் பணிபுரிவது மகிழ்ச்சி யளிக்கிறது. அவர் எதிர்காலத் துக்காக யோசிக்கும் சிறப்பான சிந்தனை உடையவர். சட்டப் பேரவையில் அவர் அறிவித்த தொழிற்கொள்கை மிகவும் சிறப்பு வாய்ந்தது. அடுத்த 100 நாட்களில் புதுச்சேரி சிறப்பாக மாற்றிமையக்க பாடுபடுவேன். தற்போது அனைத்து அதிகாரிகளும் 100 சதவீதம் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். அதனால் புதுச் சேரியை விட்டு வெளியேறும் எண்ணம் எனக்கு இல்லை என்றார்.