Published : 05 Jul 2016 07:21 AM
Last Updated : 05 Jul 2016 07:21 AM

சுவாதி கொலை எதிரொலி: பாதுகாப்பு பணியில் கூடுதல் ரயில்வே படையினர்

ஓடும் ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் சாதாரண உடை யில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ரயில்வே பாதுகாப்புப் படையின ரின் எண்ணிக்கை அதிகரிக்கப் பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் ஐடி, வாகன உற்பத்தி மற் றும் இதர தொழிற்சாலைகள் அதிக ரித்துள்ள நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் இருந்து மின் சார ரயில்களில் பயணம் செய்வோ ரின் எண்ணிக்கை அதிகரித்துள் ளது. இதை வாய்ப்பாக பயன்ப டுத்தி கொண்டு மர்ம நபர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, ரயில் பயணிகள் நலச் சங்கங்களுடன் ரயில்வே பாதுகாப்புப் படையினர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடத்திய ஆலோசனை கூட்டத்தில், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை தொடர்பாக பல் வேறு கேள்விகள் எழுப்பினர். பாது காப்பு அதிகரிக்க வேண்டும், சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும், இரவு பணிகளில் ரோந்து பணிகள் அதிகரிக்க வேண்டுமென ரயில் பய ணிகள் தரப்பில் வலியுறுத்தப்பட் டது. இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சுவாதியின் கொலைக்கு பிறகு நடந்த கூட்டத்தில் பயணிகள் தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. இதில், தேர்வு செய்யப்பட்ட முக்கிய கோரிக்கைகள் குறித்து தெற்கு ரயில்வே மூலம் ரயில்வே அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளோம்.

தற்போது, முதல்கட்ட நடவடிக் கையாக ஓடும் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் சாதாரண உடைகளில் சென்று பாதுகாப்புப் பணியை மேற்கொள்ளும் வகையில் 5 சிறப்பு குழுக்களை அமைத்துள் ளோம். ஒவ்வொரு பிரிவிலும் சுமார் 10 பேர் இருப்பார்கள்.

இந்த குழுவினர் சாதாரண உடையில் மக்களோடு மக்களாக இருப்பார்கள். குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் அல்லது சந்தேகிக் கும் நபர்களிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x