செப். 30-ம் தேதிக்குள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்காதவர்களின் சிலிண்டர் மானியம் ரத்து ஆகிறது: நுகர்வோர் கடும் அதிருப்தி

செப். 30-ம் தேதிக்குள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்காதவர்களின் சிலிண்டர் மானியம் ரத்து ஆகிறது: நுகர்வோர் கடும் அதிருப்தி
Updated on
2 min read

காஸ் சிலிண்டருக்கான மானியம் பெற நுகர்வோர்கள் தங்கள் ஆதார் எண்ணை வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தங்களுடைய வங்கிக் கணக்கில் இணைக்க வேண்டும். இல்லையெனில் அவர்களுக்கான காஸ் மானியம் ரத்து செய்யப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இது நுகர்வோர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு அறிவித்துள்ள சமையல் எரிவாயுவுக்கான நேரடி மானியத் திட்டம், கடந்த 2015, ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வந்தது. இதன்படி, சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்கும்போது அதற்கான மானியத்தை நுகர்வோ ரின் வங்கிக் கணக்கில் நேரடி யாக செலுத்துவதற்காக அவர் களுடைய வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பெரும்பாலான பொதுமக்கள் தங்களுடைய வங் கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தனர். சிலர் இன்னும் இணைக்காமல் உள்ளனர். இந் நிலையில், சிலிண்டர் எரிவாயு மானியத்தை பெற பொதுமக்கள் தங்களுடைய வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும். இல்லையென்றால் மானியம் கிடைக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய பெட் ரோலியம் மற்றும் இயற்கை எரி வாயுத் துறை துணை செயலாளர் கே.எம்.மகேஷ், எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

2016 ஜூலை 1-ம் தேதிக்குப் பிறகு ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்தவர்களுக்கு மட்டுமே மானியம் வழங்க வேண் டும். அவ்வாறு இணைக்காதவர் களுக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட வேண்டும். அதுவரை அவர்களு டைய மானியம் நிறுத்தி வைக்கப் படும். செப்டம்பர் 30-ம் தேதிக் குப் பிறகும் ஆதார் எண் இணைக் கப்படவில்லை என்றால் அக்டோ பர் 1-ம் தேதி முதல் அவர்களுக்கு மானியம் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு கடிதத்தில் கூறப் பட்டுள்ளது.

ஒப்புகை சீட்டு இல்லை

இந்த அறிவிப்பு நுகர்வோர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு முற்போக்கு நுகர் வோர் மையத்தின் தலைவர் டி.சடகோபன் கூறியதாவது: எரி வாயு சிலிண்டருக்கான மானி யம் வழங்குவதற்காக எரி வாயு விநியோகஸ்தர்கள், நுகர் வோர்களிடம் இருந்து வங்கிக் கணக்கு எண் மற்றும் ஆதார் எண்ணைப் பெற்றனர். அப் போது இதுகுறித்து போதிய தெளிவில்லாததால் ஏகப்பட்ட குழப்பங்கள் ஏற்பட்டன. முதலில் ஆதார் எண் கட்டாயம் எனக் கூறினார்கள். பின்னர் வேண்டாம் எனக் கூறி வெறும் வங்கிக் கணக்கு எண்ணை மட்டும் பெற்றனர். அதே போல், வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டபோது அதற்கு எவ்வித ஒப்புகை சீட்டும் வழங்கப்படவில்லை. இதனால் தங்களுடைய வங்கிக் கணக்கு டன் ஆதார் எண் இணைக்கப் பட்டுள்ளதா என தெரியாமல் பொது மக்கள் மத்தியில் குழப்பம் நீடிக் கிறது.

உண்மையில் 40 முதல் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செப்டம்பர் மாதத் துக்குள் ஆதார் எண் அளிக்காத வர்களுக்கு மானியம் ரத்து செய் யப்படும் என்ற அறிவிப்பினால் ஏராளமான நுகர்வோர்கள் பாதிக் கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

வங்கியில் விசாரிக்கலாம்

வங்கி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “எரிவாயு சிலிண்டர் மானியம் பெறும் வாடிக்கையாளர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்தபோது சில வங்கிகளில் அதற்கான ஒப்புகைச் சீட்டு வழங்கப்பட்டது. சில வங்கிகளில் வழங்கப்படவில்லை. எனவே இதுகுறித்து சந்தேகம் ஏற்பட்டால் தங்களுடைய வங்கிக்குச் சென்று விசாரிக்கலாம். வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் உடனடியாக இணைத்துக் கொள்ளலாம்” என்றார்.

இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறும்போது, “எரிவாயு சிலிண்டர் பெறும் வாடிக்கையாளர்கள் அனைவரும் ஆதார் எண்ணை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்பதற்காக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் இக்கடிதத்தை அனுப்பியுள்ளது. மற்றபடி ஆதார் எண் இல்லாதவர்களுக்கு மானியம் ரத்து செய்யப்படும் என்பது குறித்து எங்களுக்கு மத்திய அரசிடமிருந்து எவ்வித தகவலும் வரவில்லை” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in