

மகா சிவராத்தியை முன்னிட்டு சதுரகிரி மலையில் உள்ள கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர் - மதுரை மாவட்ட எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுர கிரி மலை. இங்கு சுந்தர மகா லிங்கம், சந்தன மகாலிங்கம் ஆகிய கோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயில்களில் சுவாமி தரிசனம் செய்வதற்காக அமாவாசை, பவுர் ணமி, பிரதோஷம் ஆகிய நாட் களிலும், அதற்கு முன்னதாகவும், அடுத்ததாகவும் என 3 நாட்கள் சதுர கிரி மலைக்குச் செல்ல பக்தர் களுக்கு அனுமதி அளிக்கப்படு கிறது.
இந்நிலையில், மகா சிவராத் திரியை முன்னிட்டு, சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்கள் நேற்று காலை 6 மணி முதல் அனுமதிக்கப்பட்டனர். விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி, மதுரை, தேனி, திண்டுக்கல் உட்பட பல் வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுந்தர மகாலிங்கம், சந்தன மகா லிங்கத்தை நேற்று தரிசித்தனர்.
அடிவாரப் பகுதியான தாணிப்பாறையில் இருந்து சதுரகிரி மலையில் உள்ள கோயில் வரை 300-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். சதுரகிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் பிளாஸ்டிக் பைகள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. நாளை (ஞாயிற்றுக் கிழமை) அமாவாசை என்பதால் 27-ம் தேதி வரை சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.