Published : 23 Feb 2017 12:11 PM
Last Updated : 23 Feb 2017 12:11 PM

முதுமலையில் கடும் வறட்சி: தொடர்ச்சியாக உயிரிழக்கும் வன விலங்குகள் - காப்பகத்தை மூட வலியுறுத்தல்

முதுமலையில் வரலாறு காணாத வறட்சி நிலவி வரும் நிலையில், கடந்த இரு தினங்களில் மூன்று யானைகள் உயிரிழந்துள்ளன. இதனால், உடனடியாக முதுமலை புலிகள் காப்பகத்தை மூட வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் பல ஆண்டுகளுக்கு பின்னர் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. வனங்களில் பசுமை குறைந்து, மரங்கள் காய்ந்து எலும்புக்கூடுகளாக காட்சி அளிக்கின்றன. வனங்களில் உள்ள நீராதாரங்களில் தண்ணீர் குறைந்து வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி இடம் பெயர்ந்து வருகின்றன.

கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் கடந்த வாரம், மசினகுடி மன்றடியார் வனப்பகுதியில், ஏற்பட்ட வனத்தீயில், 100 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமானது. தொடர்ந்து, தீத்தடுப்பு கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தெப்பக்காடு வனப்பகுதியில் 50 வயதுடைய பெண் யானையும், மசினகுடி வனப்பகுதியில் நான்கு மாத குட்டி ஆண் யானையும் நேற்று முன்தினம் திடீரென இறந்துள்ளன. தெங்குமரஹாடா வனத்தில் கள்ளம்பாளையம் பகுதியில் ஒரு யானை நேற்று உயிரிழந்தது.

இவற்றின் உடலை, கோவை கால்நடை டாக்டர் மனோகரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பிரேதப் பரிசோதனை செய்தனர். யானைகள் உடற்சோர்வு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

நீலகிரி இயற்கை சேவை அறக்கட்டளை (நெஸ்ட்) அறங்காவலர் சிவதாஸ் கூறும் போது, ‘முதுமலையில் உணவு மற்றும் தண்ணீர் இல்லை. தண்ணீர் தேடி யானைகள் நிலத்தில் துளையிட்டு தண்ணீரை தேடுகின்றன. இந்நிலையில், விலங்குகளின் தாகத்தைத் தீர்க்க வனத்துறையினர் குட்டைகளில் தண்ணீர் நிரப்பி வருகின்றனர். ஆனால், காப்பகத்தில் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் உள்ளதால், விலங்குகள் குட்டைகளில் தண்ணீர் குடிக்க காத்திருக்க வேண்டிய நிலையுள்ளது. எனவே, முதுமலை காப்பகத்தை உடனடியாக மூட வேண்டும். கோடை மழை பெய்து பசுமை திரும்பியதும், மீண்டும் காப்பகத்தைத் திறக்கலாம்’ என்றார். முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் வி.ஏ.சரவணன் கூறும்போது, ‘காப்பகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து உள்ளோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x