

சென்னை எழும்பூரில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், இணை ரயில் வருவதற்கு தாமதமானதால் இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கமாக ப்யணிக்கும் மாலை 7.35 மணிக்கு புறப்படாது. இதற்கு பதிலாக நாளை காலை 6 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில், வழக்கமாக மாலை 7.35 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.