

அரசு மருத்துவமனைகளுக்காக மருத்துவ தேர்வு வாரியம் மூலம் தேர்வான 340 உதவி மருத்துவர் கள், 165 சிறப்பு உதவி மருத்துவர் களுக்கான பணி ஆணையை முதல்வர் கே.பழனிசாமி நேற்று வழங்கினார்.
அரசு மருத்துவமனைகளில் அவ்வபோது ஏற்படும் காலிப்பணி யிடங்கள் மற்றும் புதிதாக தோற்று விக்கப்படும் பணியிடங்களை நிரப்பு வதற்காக, மருத்துவப் பணியாளர் கள் தேர்வு வாரியம், நாட்டில் முதல் முறையாக தமிழகத்தில் கடந்த 2012-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் தொங்கப்பட்டது. இந்த வாரியம், இதுவரை 8 ஆயி ரத்து 692 மருத்துவர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள், 9 ஆயிரத்து 190 செவிலியர்கள் உட்பட 20 ஆயிரத்து 862 பேரை தேர்வு செய்துள்ளது.
தற்போது மருத்துவப் பணி யாளர்கள் தேர்வு வாரியம் மூலம் 340 உதவி மருத்துவர்கள், 165 சிறப்பு உதவி மருத்துவர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர் களுக்கான பணி நியமன ஆணை களை முதல்வர் கே.பழனிசாமி நேற்று வழங்கினார்.
ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை சிறப்பு கூட்ட அரங்கில் நடந்த நிகழ்ச்சி யில், 24 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங் கினார்.
நிகழ்ச்சியில், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டப் பேரவை துணைத்தலைவர் வி.பொள்ளாச்சி ஜெயராமன், சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத் தலைவர் மோகன் பியாரே, மருத்துவக் கல்வி இயக்குனர் எட்வின் ஜோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.