Published : 25 Jul 2016 09:57 AM
Last Updated : 25 Jul 2016 09:57 AM

போலி பதிவெண் கார் குறித்த எம்எல்ஏவின் புகாரை அலட்சியப்படுத்திய போலீஸார்: வழக்கு தொடர ஆலோசனை

நாகர்கோவில் அருகே போலி பதிவெண் கொண்ட காரை எம்எல்ஏ சுரேஷ்ராஜன் மடக்கிப் பிடித்தார். இது தொடர்பாக காவல்துறையை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தபோது, அவர்கள் அலட்சியப்படுத்திய தாகவும், போலீஸாரின் மெத் தனப்போக்கு தொடர்பாக வழக்கு தொடரப்போவதகாவும் சுரேஷ்ராஜன் தெரிவித்தார்.

நாகர்கோவில் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் என். சுரேஷ் ராஜன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: நேற்று முன்தினம் இரவு 10 மணி யளவில் சுங்கான்கடையில் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, அங்கு வேகமாக ஒரு கார் வந்து நின்றது. அந்த காரில் இருந்து 8 பேர் கீழே இறங்கி பேசிக் கொண்டி ருந்தனர். அவர்கள் வந்த காரின் பதிவெண்ணை பார்த்தபோது சந்தேகமாக இருந்தது.

அவர்கள் வந்த காரில், டி.என். 75, டி.666 என்று அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டு இருந்தது. அதை கிழித்தபோது, நம்பர் பிளேட்டில் கே.எல். 08, இசட் 707 என்று இருந்தது. இதுகுறித்து தகவல் தெரிவிக்க காவல் கட்டுப்பாட்டு அறைக்கு எனது கைப்பேசியில் தொடர்புகொண்டு பேசினேன்.

போனில் பேசிய காவலர், ‘நீங்கள் சுரேஷ்ராஜன் இல்லை. அவர் சென்னையில் இருக்கிறார்’ என்று கூறி இணைப்பைத் துண் டித் துவிட்டார். பின்னர் மீண்டும் 4 முறை தொடர்பு கொண்டபோதும் இணைப்பைத் துண்டித்துவிட் டனர். அதன்பின், நாகர்கோவில் துணை கண்காணிப்பாளர், மாவட்டக் காவல் கண்காணிப்பா ளரை பலமுறை தொடர்பு கொண் ட போதும் அவர்கள் போனை எடுக்கவில்லை.

பின்னர் கன்னியாகுமரி துணை காவல் கண்காணிப்பா ளரை தொடர்புகொண்டு போலி பதிவெண் கொண்ட கார் குறித்து புகார் அளித்தேன். அதன்பிறகு, அவர் சிறிது நேரத்தில் என்னை தொடர்புகொண்டு அந்த காரை போலீஸார் பறிமுதல் செய்துவிட் டதாக தெரிவித்தார்.

வரும் 30-ம் தேதி நடைபெற உள்ள குமரி மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டத்தில், காவல்துறையின் மெத்தனப்போக்கு தொடர்பாக வழக்கு தொடர ஆலோசனை நடத்தப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x