தலித் கிறிஸ்தவர்கள், தலித் முஸ்லிம்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்: சென்னை ஆர்ச் பிஷப் வேண்டுகோள்

தலித் கிறிஸ்தவர்கள், தலித் முஸ்லிம்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்: சென்னை ஆர்ச் பிஷப் வேண்டுகோள்
Updated on
1 min read

தலித் கிறிஸ்தவர்களையும், தலித் முஸ்லிம்களையும் தாழ்த்தப்பட் டோர் பட்டியலில் சேர்க்க வேண் டும் என்று மத்திய அரசுக்கு சென்னை ஆர்ச் பிஷப் ஜார்ஜ் அந்தோணிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தலித் கிறிஸ்தவர்களை தாழ்த் தப்பட்டோர் பட்டியலில் இருந்து நீக்கிய நாளான 10.8.1950-ஐ தலித் கிறிஸ்தவ அமைப்புகள் கறுப்பு தினமாக அனுசரித்து வருகின்றன. அந்த வகையில், சென்னை மயிலை உயர்மறைமாவட்ட தாழ்த் தப்பட்டோர், எஸ்டி பணிக்குழு, சமூக நீதி அமைதி வளர்ச்சி பணிக்குழு சார்பில் சென்னை சாந்தோம் பேராலய வளாகத்தில் நேற்று கறுப்பு தினம் அனுசரிக்கப் பட்டது.

சென்னை மயிலை உயர்மறை மாவட்ட ஆர்ச் பிஷப் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி யில் பாதிரியார்கள், கன்னியாஸ்திரி கள், சிஎஸ்ஐ போதகர்கள் உட்பட ஏராளமான தலித் கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். தாழ்த்தப் பட்டோர், எஸ்டி பணிக்குழுவைச் சேர்ந்த எர்ணஸ்ட் பால், அருட் பணியாளர் மனுவேல், அருட்திரு மரிய அருள் ராஜா, சிஎஸ்ஐ சினாடு பொருளாளர் சி.ராபர்ட் புரூஸ், மறைமாவட்ட முதன்மை குரு எம்.அருள்ராஜ், தாழ்த்தப்பட்டோர், எஸ்டி பணிக்குழு இயக்குநர் மரிய ஜான் போஸ்கோ உள்ளிட்டோர் பேசினர்.

இதைத்தொடர்ந்து, ஆர்ச் பிஷப் ஜார்ஜ் அந்தோணிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

மதத்தின் பெயரால் தலித் கிறிஸ்தவர்களுக்கு கடந்த 69 ஆண்டுகளாக சலுகைகள் மறுக் கப்பட்டு வருகின்றன. இதற்காக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம்.

இந்த நேரத்தில் மத்திய அரசுக்கு 2 கோரிக்கைகளை விடுக்கிறோம். முதலாவது, இந்திய அரசியல் சாசனத்தின் ஆணை-1950-ல் உள்ள 3-வது பத்தியை நீக்கிவிட்டு தலித் கிறிஸ் தவர்களுக்கு மட்டுமின்றி தலித் முஸ்லிம்களுக்கும் தாழ்த்தப் பட்டோர் வகுப்பினருக்கான சலு கைகளை அளிக்க வேண்டும். இரண்டாவது, தலித் கிறிஸ்தவர்கள் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் நீக்கம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ரிட் மனுவுக்கு மத்திய அரசு உரிய பதிலளிக்க வேண்டும். தலித் கிறிஸ்தவர்களுக்கு சலுகைகள் மறுக்கப்படுவது மனித உரிமைக்கு எதிரானது. தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கும் வரை எங்களின் போராட்டம் தொடரும்.

இவ்வாறு பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in