

தீ விபத்துக்குள்ளான தி சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி மந்தமாக நடந்து வருகிறது.
தியாகராயநகர் உஸ்மான் சாலையில் தி சென்னை சில்க்ஸ் இயங்கி வந்தது. 7 மாடி கொண்ட இந்த கட்டிடத்தின் தரைத் தளத்தில் குமரன் தங்க மாளிகை என்ற பெயரில் நகைக் கடையும் செயல்பட்டு வந்தது.
இந்த கட்டிடத்தில் கடந்த 31-ம் தேதி அதிகாலை தீ விபத்து ஏற் பட்டது. இதில், 7 மாடியும் முற்றி லும் சேதம் அடைந்தது. நகைக் கடை பாதுகாப்பு பெட்டகத்துக் குள் இருக்கும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளது.
இந்நிலையில், நேற்று முன் தினம் கட்டிடத்தை இடிக்கும் தனி யார் நிறுவனம் மற்றும் சென்னை சில்க்ஸ் நிறுவனத்தினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கட்டிடம் இடிக் கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
நேற்று இரு தரப்பினரும் பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து நேற்று 5-வது நாளாக கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கி யது. இதுவரை 50 சதவீத பணி மட்டுமே முடிந்துள்ளது. இரு தரப்பினரும் போதிய ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் தீ பிடித்த கட்டிடத்தை இடிக்கும் பணி மந்தமாக நடந்து வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.