அமெரிக்கர்கள் இருவர் உள்பட மூவருக்கு மருத்துவ நோபல் பரிசு

அமெரிக்கர்கள் இருவர் உள்பட மூவருக்கு மருத்துவ நோபல் பரிசு
Updated on
1 min read

நடப்பு ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசை, அமெரிக்கர்கள் ஜேம்ஸ் ரோத்மேன், ராண்டி செக்மேன், ஜெர்மனில் பிறந்த தாமஸ் சுவேத் ஆகியோர் பகிர்கின்றனர்.

இந்த அறிவிப்பை இன்று வெளியிட்ட நோபல் தேர்வுக் குழு, செல்களுக்கு இடையே மூலக்கூறுகளை அனுப்பும் முறை எவ்வாறு நடைபெறுகிறது என்பது தொடர்பான ஆய்வுக்காக இம்மூவரும் மருத்துவ நோபல் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

மருத்துவ நோபல் பரிசு பெறும் மூன்று மருத்துவ விஞ்ஞானிகளும், நமது உடலில் செல்களுக்கு இடையே மூலக்கூறுகள் எவ்வாறு கொண்டு செல்லப்படுகின்றன என்பது தொடர்பான முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். இது, நரம்பு மண்டல நோய்கள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடுகள், சர்க்கரை நோய் குறித்த ஆய்வுக்கு பயனளிக்கும் என்று விளக்கம் தரப்பட்டுள்ளது.

வரும் டிசம்பர் 10-ம் தேதி ஸ்டாக்ஹோமில் நடைபெறும் விழாவில் மூவருக்கும் பரிசுத் தொகை வழங்கப்படும். பரிசுத் தொகையாக கிடைக்கும் 1.25 மில்லியன் அமெரிக்க டாலரை மூவரும் பகிர்ந்துகொள்வார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in