Published : 30 Dec 2013 11:30 AM
Last Updated : 30 Dec 2013 11:30 AM

கூட்டணி பற்றி ஜன.10-ல் அறிவிப்பு - மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேட்டி

மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து ஜன.10-ல் சென்னையில் நடைபெற உள்ள கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா.

நாகை மாவட்டம் சங்கரன் பந்தலில் சனிக்கிழமை இரவு நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

அமெரிக்காவில் இந்திய துணைத் தூதர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியா காட்டிய கடுமையான எதிர்வினை போன்று தமிழக மீனவர்கள் கைது செய்யப் படும் செயலுக்காக இலங்கையிடம் எதிர்ப்பு காட்டுவதில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.

தமிழகத்தில் கரும்புக்கான விலையை டன்னுக்கு ரூ.4 ஆயிரம் என அரசு நிர்ணயிக்க வேண்டும். இந்த ஆண்டு தமிழகத்தில் பரவ லாக பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகளை முறையாக சேர்க்காமல் அதிகாரிகள் தவறிழைத்துள்ளனர்.

குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடிக்குத் தொடர்பு இல்லை என தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இது மோடிக்கு ஒரு தற்காலிக நிவாரணம்தான்.

தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. அதே போன்ற நிலைதான் வரும் மக்களவைத் தேர்தலிலும் ஏற்படும்.

மின்வெட்டு பிரச்சினை

அதிமுக ஆட்சி வந்தவுடனேயே மின்வெட்டு பிரச்சினை தீர்க்கப் படும் என்று கூறப்பட்டது. ஆனால், ஆட்சிக்கு வந்து இரண் டரை ஆண்டுகள் ஆகியும் இன்னமும் மின்சார பற்றாக்குறை தீர்க்கப் படவில்லை. காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்க அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசு எடுத்திருக்கும் முடிவு வரவேற்கத்தக்கது. இனியும் அதில் மாநில அரசு உறுதியாக இருக்க வேண்டும். அதையும்

மீறி மீத்தேன் வாயு எடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் மனிதநேய மக்கள் கட்சி மக்களோடு சேர்ந்து களத்தில் இறங்கி போராடும்” என்றார் ஜவாஹிருல்லா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x