

சென்னை மாநகராட்சியின் வளர்ச்சித் திட்டங்களுக்காக கடந்த 5 ஆண்டுகளில் ரூ.16,541 கோடியே 60 லட்சம் செலவிடப்பட்டுள்ளது என்று மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் நேற்று நடந்தது. இதில், மேயர் சைதை துரைசாமி பேசிய தாவது: மு.க.ஸ்டாலின் மேயராக இருந்த காலத்தில் மாநகராட்சி யின் வளர்ச்சிக்காக ரூ.534 கோடி செலவிடப்பட்டது. மா.சுப்பிரமணி யன் மேயராக இருந்த காலத்தில் ரூ.1,665 கோடி செலவிடப்பட்டது. அதிமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் மாநகராட்சி வளர்ச்சிக்காக ரூ.16,541 கோடியே 60 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் காலத்தில் 8,328 பணிகள் முடிக்கப்பட்டன. மா.சுப்பிரமணியன் காலத்தில் 9,576 பணிகள் முடிக்கப்பட்டன. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் 3 லட்சத்து 2 ஆயிரத்து 878 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
மா.சுப்பிரமணியன் மேயராக இருந்த காலத்தில் பெறப்பட்ட மொத்த மனுக்கள் 5,665 மட்டும் தான். அவர் செவ்வாய்க்கிழமை களில் மட்டும் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றிருக் கிறார். அது மட்டுமே மாநகராட்சி பதிவுகளில் உள்ளது. மு.க.ஸ்டா லின் மேயராக இருந்த காலத்தில் மனுக்கள் பெற்றாரா என்பது குறித்து எந்தப் பதிவும் இல்லை. கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 5 லட்சத்து 69 ஆயிரத்து 629 மனுக் கள் பெறப்பட்டன. இவற்றில் பெரும்பாலான மனுக்கள், கோரிக் கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் 26,910 மணி நேரம் பணியாற்றி இருக்கிறேன். எனது சொந்த வாகனத்தில், சொந்த செலவில் எரிபொருள் நிரப்பி 3 லட்சத்து 57 ஆயிரம் கி.மீட்டருக்கு அதிகமாக பயணம் செய்து மக்களை சந்தித்து பணியாற்றி இருக்கிறேன். இவ்வாறு மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார்.