

சென்னையில் இந்த மாதத்தில் இதுவரை 37.9 செ.மீ. மழை பெய்துள்ளது. இது, கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 82 சதவீதம் அதிகமாகும்.
கடந்த ஆண்டு அக்டோபர் 1 முதல் 24-ம் தேதி வரை சென்னையில் 14.3 செ.மீ. மழை மட்டுமே பதிவாகி யிருந்தது. ஆனால், இந்த ஆண்டு அக்டோபர் 1 முதல் 26-ம் தேதி வரை 37.9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இந்த காலகட்டத்தில் 20. செ.மீ. மழை மட்டுமே பெய்யும் எதிர்பார்த்திருந்த நிலையில், அதைவிட 82 சத வீதம் அதிகமாக பெய் துள்ளது.
சென்னையில் நேற்று ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. கிண்டி, மாம்பலம், கோடம்பாக்கம், சூளைமேடு உள்ளிட்ட பகுதிகளில் காலையில் லேசான தூறல் இருந்தது.
பகலில் வெயில் அடித்தபோதும் வெப்பம் குறைவாகவே இருந்தது. நகரில் அதிகபட்சமாக 29.5 டிகிரியும் குறைந்தபட்சமாக 25.3 டிகிரியும் வெப்பம் பதிவானது.
அடுத்த 24 மணி நேரத்தில் நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.