5 நாட்கள் விவாதம் நடக்கிறது: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 24-ம் தேதி நிறைவு - பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவிப்பு

5 நாட்கள் விவாதம் நடக்கிறது: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 24-ம் தேதி நிறைவு - பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவிப்பு
Updated on
1 min read

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் 20-ம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடக்கும். 24-ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் உரை, அமைச்சரின் பதில் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறை வடையும் என்று பேரவைத் தலைவர் பி.தனபால் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் வரும் நிதியாண்டுக்கான பட் ஜெட்டை நிதியமைச்சர் டி.ஜெயக் குமார் நேற்று தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்து முடித் ததும், பேரவைத் தலைவர் பி.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் அவரது அறையில் நடந்தது. இதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட் டையன், பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெய ராமன், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், கொறடா சக்கரபாணி, கு.பிச்சாண்டி, காங் கிரஸ் சார்பில் கே.ஆர்.ராமசாமி, முஸ்லிம் லீக் சார்பில் முகமது அபுபக்கர் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். கூட்டம் 20 நிமிடம் நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக பேரவைத் தலைவர் பி.தனபால் கூறியதாவது:

அலுவல் ஆய்வுக்குழு கூட்டத் தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, 17-ம் தேதி (இன்று) மற்றும் 18, 19 தேதிகள் அரசு விடுமுறை நாட்கள் என்பதால் பேரவைக் கூட்டம் இல்லை. 20-ம் தேதி அவை மீண்டும் கூடுகிறது. மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் பாலையா, வில்வநாதன் உள்ளிட்ட மூவர் மறைவுக்கு அன்றைய தினம் இரங்கல் குறிப்புகள் வாசிக் கப்படும். அதன்பிறகு, பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடங்கும்.

பட்ஜெட் மீதான 2, 3-வது நாள் விவாதங்கள் 21, 22 தேதிகளில் நடக்கும்.

2017-18ம் ஆண்டு செலவுக்கான முன்பண மானிய கோரிக்கை, 2016-17ம் ஆண்டு இறுதி துணை நிதிநிலை அறிக்கை, துணை மானிய கோரிக்கை மீதான வாக் கெடுப்பு, நிதி ஒதுக்க சட்ட முன் வடிவுகள் அறிமுகம் ஆகிய நிகழ்வு கள் 23-ம் தேதி நடக்கும். அன்றைய தினமே, 2017-18ம் ஆண்டின் செலவுக்கான முன்பண மானிய கோரிக்கைகள் மீது வாக்கெடுப்பு, நிதி ஒதுக்க சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்தப்படும். அதன் பின், 4-வது நாள் விவாதம் நடக்கும்.

இறுதிநாளான 24-ம் தேதி, பட்ஜெட் மீதான விவாதம் நடக்கும். இதில், எதிர்க்கட்சித் தலைவர் உரை, அமைச்சரின் பதில்உரை ஆகியவை இருக்கும். அரசினர் சட்ட முன்வடிவுகள் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். வழக்கம்போல காலை 10 மணிக்கு பேரவை கூடும். கேள்விநேரம் வழக்கம்போல எடுத்துக்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், ‘‘பேரவைத் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம், விதிகளின்படி எடுத்துக்கொள்ளப் படும். திமுக எம்எல்ஏக்கள் மீது அதிமுக எம்எல்ஏ வெற்றி வேல் அளித்த புகார்கள், பேரவை யின் உரிமைக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in