

தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் முருகானந்தம் மீது மல்லிப்பட்டினத்தில் நடந்த தாக்கு தலுக்கு பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்
தஞ்சை பாஜக வேட்பாளர் கருப்பு (எ) முருகானந்தம், மல்லிப்பட்டினம் கிராமத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்யும்போது சிலர் தாக்குதல் நடத்தி யதில் 30க்கும் மேற்பட்ட பாஜக தொண் டர்கள் காயம் அடைந்துள்ளனர். வேட்பாளரும் இந்தத் தாக்குதலில் காயமடைந்துள்ளார். இனி இதுபோன்ற வன்முறை சம்பவங்களைத் தடுக்க தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
தஞ்சை வேட்பாளர் முருகானந்தம் பிரச்சாரத்துக்குச் சென்றபோது, ஊருக்குள் வரக்கூடாது என்று சிலர் தடுத்துள்ளனர். பின்னர் வேட்பாளரின் வாகனத்தை மட்டும் அனுமதித்துள்ளனர். இதன்பின் வன்முறையாளர்கள் வேட்பா ளரையும், அவருடன் வந்தவர்களையும் தாக்கியுள்ளனர். இந்த வன்முறைத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக் கிறேன்.
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் களுக்கு அவர்களின் தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று வாக்கு சேகரிக்க அரசியலமைப்புச் சட்டப்படி உரிமை உண்டு. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித் திருக்கிறது.
இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வேட்பாளர்கள் அனைவருக்கும் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.