

புதுச்சேரியில் பாரதியார் வசித்த இல்லத்துக்கு நேற்று வந்த பாஜக முன்னாள் எம்பி தருண் விஜய், அங்கு உள்ள பாரதி நினைவு அருங்காட்சியகம் மற்றும் ஆய்வுக் கூடத்தை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தேசிய ஒற்றுமைக்கு அடையாளமாகவும், கலாச்சாரம், நாகரிகத்தின் அடையாளமாகவும் பாரதியார் திகழ்கிறார். வாரணாசியில் அவர் வாழ்ந்த வீட்டை பார்த்தேன். அதை உத்தரப்பிரதேச முதல்வரிடம் தெரிவித்து மிகப்பெரிய கலாச்சார சுற்றுலாத் தலமாக மாற்றுவேன். பாரதியின் படைப்புகள் அனைத்தையும் ஆங்கிலம், இந்தி, பிற இந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்ய மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்பேன்.
பாரதியின் முக்கிய ஆவணங் கள், புதுச்சேரியில் அவர் வசித்த இல்லம் உள்ள அருங்காட்சி யகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டியவை. பாரதியின் கடிதங் கள், ஆவணங்கள் அனைத்தையும் டிஜிட்டல்மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மாணவர்கள் எதிர்ப்பு
புதுச்சேரி பல்கலைகழகத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த தருண் விஜய்க்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்னிந்தியாவை சேர்ந்தவர்களை கருப்பர்கள் என்று விமர்சனம் செய்த தருண் விஜய் புதுச்சேரி பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கோஷமிட்டனர். அவர்களை போலீ ஸார் தாக்கி இழுத்துச் சென்றதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.