

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் பேராட்டத்துக்கு அதிமுக (அம்மா) கட்சி சார்பில் ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தேசிய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கடந்த மார்ச் 14-ம் தேதியில் இருந்து டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரி விக்கும் வகையில் தமிழகத் தில் நடக்கும் பொது வேலை நிறுத்தத்துக்கு அதிமுக (அம்மா) சார்பில் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்.
விவசாய கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத் தல், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி, குடிநீர் பற்றாக்குறைக்கு மாநில அரசு கேட்டுள்ள தொகையை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலி யுறுத்தி, அறவழியில் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு அதிமுக (அம்மா) கட்சி ஆதரவு அளிக்கிறது.
கடந்த 20 நாட்களாக போராடி வரும் விவசாயிகளை தமிழக அரசு சார்பிலும், கடசியின் சார்பிலும் மக்களவை துணைத் தலைவர், அமைச்சர்கள், எம்.பி.க்கள் நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந் தனர். விவசாயிகளை அழைத்துச் சென்று மத்திய நிதி அமைச்சர், உள்துறை அமைச்சரை சந் தித்துப் பேசினர். ஆனால், விவசாயிகளின் கோரிக்கைகளில் சிலவற்றுக்குக்கூட மத்திய அரசு எந்த உறுதியும் அளிக்கவில்லை.
இயற்கை பேரிடர், பருவ நிலை மாற்றங்களாலும், நீதி மன்ற உத்தரவுகளின்படி நடந்து கொள்ள மறுக்கும் சில மாநிலங் களின் குறுகிய சிந்தனையாலும் விவசாயிகளுக்குத் தொடர்ந்து ஏற்பட்டுவரும் இன்னல்களை நிரந்தரமாக தீர்க்க, தேசிய அளவிலான உறுதியான செயல் திட்டம்தான் ஒரே தீர்வு. அத் தகைய தீர்வுக்காக விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்துக்கு அதிமுக (அம்மா) கட்சி எப்போதும் துணை நிற்கும்.
இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.