

அரியலூர் மைனர் பெண் நந்தினி கொலை வழக்கை டிஎஸ்பி விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூரைச் சேர்ந்த மைனர் பெண் நந்தினி(17). கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி நந்தினி திடீரென மாயமானார். போலீஸார் நந்தினியை பல இடங்களில் தேடியும் காணவில்லை. இதற்கிடையே கீழமாளிகை கிராமத் தில் அழகுதுரை என்பவருக்கு சொந்தமான கிணற்றில் இருந்து கடந்த ஜனவரி 14-ம் தேதி நந்தினி யின் உடல் மீட்கப்பட்டது.
இந்த வழக்கில் இந்து முன் னணி பிரமுகர் மணிகண்டன் உள்ளிட்ட 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய் யப்பட்டனர். இந்த வழக்கை தற்போது ஜெயங்கொண்டம் டிஎஸ்பி விசாரித்து வருகிறார். இதற் கிடையில் இந்த வழக்கை சிபிசி ஐடிக்கு மாற்றக்கோரி நந்தினியின் தாயார் ராஜகிளி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நடந்தது. அப்போது ராஜ கிளி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வைகை, ‘‘மிகவும் பதற்றமான இந்த வழக்கில் அரசுத் தரப்பு வேண்டுமென்றே அவ காசம் கோரி இழுத்தடித்து வரு கிறது. தற்போது அவசர கதியில் இந்த வழக்கை விசாரித்து, குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர். உண்மையை வெளிக்கொணரும் வகையில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும்’’ என வாதிட்டார்.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக் கில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராக இருப்பதாக கூறி கால அவகாசம் கோரினார். இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 24-க்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை டிஎஸ்பி விசார ணைக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் ஜெயங்கொண்டம் டிஎஸ்பி ஏ.ஜி.இனிகோ திவ்யன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது:
நந்தினியின் சகோதரி சிவரஞ்ச னியிடம் நடத்திய விசாரணையில் மணிகண்டன் என்பவரை நந்தினி காதலித்தது தெரியவந்தது. தன்னைக் காதலித்த மணிகண்ட னுடன்தான் நந்தினி சென்றுள்ளார் என ஆய்வாளர் முடிவு செய் துள்ளார். மணிகண்டனிடம் நடத்தப் பட்ட விசாரணைக்குப் பிறகு ஜனவரி 5-ம் தேதி முதல் திடீரென அவர் மாயமானார். இதற் கிடையே மணிகண்டன் ஜனவரி 12-ம் தேதி தற்கொலைக்கு முயன்று மருத்துவ சிகிச்சையில் இருப்பது தெரியவந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நந்தினி பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்ததை மணிகண்டன் ஒப்புக்கொண்டார். அதன் பிறகு இந்த வழக்கு போக்ஸோ சட்டத்தின் கீழும், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவின் கீழும் கொலை வழக்காக மாற்றப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கும், சாட்சிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. குற்றப்பத்திரிகை இன்னும் தாக்கல் செய்யப்பட வில்லை. நந்தினி குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.4 லட்சத்து 12 ஆயிரத்து 500 வழங்கப்பட்டுள்ளது. வழக்கில் தொடர்புடைய மணி கண்டன் உள்பட 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 90 சதவீத விசாரணை முடிவடைந்துள்ளது. உடற்கூறு ஆய்வு மற்றும் டிஎன்ஏ பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். விசாரணை முறையாக சரியான பாதையில் செல்கிறது. எனவே சிபிசிஐடி விசாரணை தேவையில்லை’’ என அதில் கூறியுள்ளார்.