அக்.30-ல் பசும்பொன் செல்கிறார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

அக்.30-ல் பசும்பொன் செல்கிறார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
Updated on
1 min read

முத்துராமலிங்கத் தேவர் 52-வது ஆண்டு குரு பூஜையை முன்னிட்டு, அக்டோபர் 30-ல் பசும்பொன் செல்லும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அங்கு தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், "பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 107-வது ஜெயந்தி விழா மற்றும் 52-வது ஆண்டு குரு பூஜையை முன்னிட்டு, 30.10.2014 வியாழக்கிழமை அன்று ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.

அவருடன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜு, உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். சுந்தரராஜ், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத் தலைவர் கு. தங்கமுத்து மற்றும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் ஆர். முருகையா பாண்டியன் ஆகியோரும் மரியாதை செலுத்துவார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in