சட்டப்பேரவையில் நடந்த சம்பவம் குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் திமுக எம்.பி.க்கள் புகார் மனு: நேரில் சந்தித்து அளித்தனர்

சட்டப்பேரவையில் நடந்த சம்பவம் குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் திமுக எம்.பி.க்கள் புகார் மனு: நேரில் சந்தித்து அளித்தனர்
Updated on
1 min read

ஆளுநர் வித்யாசாகர் ராவை திமுக எம்.பி,க்கள் சந்தித்து சட்டப்பேரவையில் நடந்த சம்பவம் குறித்து மனு கொடுத்தனர்.

திமுக எம்.பி.க்கள் ஆர்.எஸ். பாரதி, டி.கே.எஸ்.இளங் கோவன், திருச்சி சிவா ஆகியோர் ஆளுநர் வித்யாசாகர் ராவை கிண்டி ராஜ்பவனில் நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது, சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்த மனு ஒன்றையும் அளித்தனர்.

இந்த சந்திப்பு குறித்து நிருபர்களிடம் திருச்சி சிவா கூறியதாவது:

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சிகள் இல்லாமல் பேரவையில் நடந்த வாக் கெடுப்பு சட்டத்துக்கு எதி ரானது. சட்டப்பேரவை தலைவர் ஒருதலைப்பட்சமாக செயல்பட் டுள்ளார்.

வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஆளுநரிடம் மனு கொடுத்து இருக்கிறோம். சட்டப்பேரவையில் நடந்த சம்பவங்கள் குறித்தும் மனுவில் தெரிவித்திருக்கிறோம்.

இவ்வாறு திருச்சி சிவா கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in