1,111 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்: ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய அழைப்பு

1,111 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்: ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய அழைப்பு
Updated on
1 min read

ஏற்கெனவே நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் (பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு) தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. அந்த வகையில், முந்தைய தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யவும், முன்பு குறிப்பிட்ட தகவல்களை உறுதி செய்துகொள்ளவும் நேற்று சிறப்பு வசதி செய்யப்பட்டது.

அதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தேர்வு வாரிய இணையதளத் துக்கு (www.trb.tn.nic.in) சென்று விண்ணப்ப எண் அல்லது பெயர் மற்றும் பிறந்த தேதியைக் குறிப் பிட்டு தேவையான விவரங்களை பதிவேற்றம் செய்யலாம்.

கூடுதல் கல்வித்தகுதி, அண்மை யில் பிஎட் முடித்திருந்தால் அதன் மதிப்பெண், தமிழ் வழியில் படித்திருந்தால் அதுபற்றிய விவரம், புகைப்படம், டிஜிட்டல் கையெ ழுத்து உள்ளிட்ட விவரங்களையும் பதிவேற்றம் செய்யலாம். இவ் வாறு ஆன்லைனில் அனைத்து விவ ரங்களையும் உள்ளீடு செய்த பிறகு அதை ஒரு பிரின்ட் அவுட் எடுத்து ஒப்புகைச் சீட்டுபோல வைத்துக்கொள்ளுமாறு ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் காகர்லா உஷா அறிவித்துள்ளார்.

விவரங்கள் ஆன்லைனில் பதி வேற்றம் செய்யப்பட்டதும், இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்படும் என்று தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். பாடவாரியாக காலியிடங்கள் குறித்த விவரத்தை வெளியிடுமாறு விண்ணப்பதாரர் கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in