

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி மு.க.ஸ்டாலின் தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 30-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
திண்டுக்கல் திமுக பொதுக்கூட் டத்தில் தமிழக அரசையும், முதல் வரையும் அவதூறாக பேசியதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மீது திண்டுக்கல் நீதிமன்றத்தில் 2013-ல் அரசு வழக்கறிஞர் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மு.க.ஸ்டா லின் தரப்பில் மனு செய்யப்பட்டது.
அதில், மாநில அரசின் செயல் பாடுகள்குறித்து நியாயமான விமர்சனங்கள், கருத்து தெரிவிக்க எதிர்க்கட்சிகளுக்கு உரிமை உண்டு. அதற்காக அவதூறு வழக்கு தொடர முடியாது. இதனால், அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும். விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என ஸ்டாலின் கூறியிருந்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசார ணைக்கு வந்தபோது, திண்டுக் கல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அவதூறு வழக்கு விசார ணையின்போது, மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக விலக்கு அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி எஸ்.விமலா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. ஸ்டாலின் தரப்பில் வழக்கறிஞர்கள் எஸ்.ரவி, ஏ.கே.மாணிக்கம் வாதிட்டனர். அரசு வழக்கறிஞர் ஏ.பி.பால சுப்பிரமணியன் வாதிடும்போது, இந்த வழக்கில் அரசு சார்பில் தலைமை குற்றவியல் வழக் கறிஞர் வாதிட இருப்பதால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்றார். இதையேற்று அடுத்த விசாரணையை ஆக. 30-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.