

எம்ஜிஆர் சத்துணவு திட்டத் தின் கீழ் ஊட்டச்சத்து மிக்க கலவை சாதம் வழங்கப்படுகி றது. இதன் மூலம் தொடக்கப் பள்ளிகளில் படிக் கும் 26 லட்சத்து 88 ஆயிரம் குழந்தை களும், நடுநிலை, உயர்நிலைப் பள்ளி களில் படிக்கும் 28 லட்சத்து 17 ஆயிரம் மாணவ,மாணவிகளும் பயனடைந்து வருகின்றனர். சத்துணவு திட்டத்துக்கு ரூ.1,644 கோடியே 52 லட்சம் ஒதுக்கப் பட் டுள்ளது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 6 முதல் 36 மாதங்கள் வரையுள்ள 17 லட் சத்து 63 ஆயிரம் குழந்தைகளுக் கும், 2 முதல் 5 ஆண்டு கள் வரை யுள்ள 13 லட்சத்து 97 ஆயிரம் குழந்தைகளுக்கும் 6 லட்சத்து 55 ஆயிரம் கர்ப்பி ணிகளுக்கும் ஊட்டச்சத்து மிக்க உணவு வழங்கப் பட்டு வருகிற து. இந்த திட்டத்துக்கு ரூ.1,699 கோடியே 79 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
முதியோர் உதவித்தொகை திட்டத்தின்கீழ் அனைத்துப் பிரிவி னருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிற து. இந்த திட்டத்துக்காக ரூ.3,820 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அனைத்து திருமண உதவி திட்டங்களுக்கும் பட்ஜெட்டில் ரூ.703 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
பெண்கள், குழந்தைகள், திருநங்கைகள், முதியோர், ஆதரவற்றோர் போன்ற சமு தாயத்தில் எளிதில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பிரிவினரின் பாதுகாப்புக்காகவும் அவர்களின் முன்னேற்றத்துக்காகவும் பல நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், தொட்டில் குழந்தை திட்டம் உள்ளிட்ட திட் டங்களுக்காக ரூ.140 கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது.
திருமண உதவித் திட்டங்க ளின் கீழ் வழங்கப்படும் திரு மாங்கல்யத் துக்கான தங்கம் ஏற்கெனவே 8 கிராமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டம், பெண்கள் உயர் கல்வி பயில்வதை ஊக்குவித்து இளம்வயது திருமணங்களை தடுத்து அவர்கள் பொருளாதார விடுதலை அடைய வழிவகுக்கும். அனைத்து திருமண உதவித் திட்டங் களுக்காகவும் ரூ.703 கோடியே 16 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப் பட்டுள்ளது.