Published : 13 Jul 2016 08:27 AM
Last Updated : 13 Jul 2016 08:27 AM

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்ந்த திருப்பூர் மருத்துவர் தற்கொலையில் சந்தேகம்? - மத்திய, மாநில அரசுகள் தலையிட கோரிக்கை

திருப்பூர் வெள்ளியங்காடு கோபால் நகரைச் சேர்ந்த கணேசனின் மகன் சரவணன (24). இவர், மதுரை மருத்துவக் கல்லூரியில் கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். முடித்து, டெல்லி எய்ம்ஸ் மையத்தில் எம்.டி. மேற்படிப்பில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு சேர்ந்துள்ளார்.

கடந்த 9-ம் தேதி பணி முடித்து விட்டு, நள்ளிரவு அறைக்குத் திரும்பியுள்ளார். மறுநாள் நண்பர் கள் அவரை அலைபேசியில் தொடர்புகொள்ள முடியாத நிலை யில். ஹோஸ்காஸ் பகுதியில் அவர் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, வலது கையில் விஷ ஊசி செலுத்தப்பட்ட நிலையில், சரவணன் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து, திருப்பூரில் உள்ள அவரது குடும்பத்துக்கு, தகவல் அளிக்கப்பட்டு, உறவினர்கள் டெல்லி விரைந்தனர். சரவணனின் சடலம் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, விமானம் மூலமாக நேற்று கோவை கொண்டு வரப்பட்டது. பின்னர், அங்கிருந்து திருப்பூர் எடுத்துவரப்பட்டு மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது.

சரவணனுடன் படித்த சுப்பிர மணியம், கபிலன் ஆகியோர் கூறியதாவது: எம்.டி. படிப்புக்கான எய்ம்ஸ் நுழைவுத் தேர்வில், அகில இந்திய அளவில் 47-வது இடம் பிடித்தார். அவரது வலது கை தமனி நரம்பில் ஊசி செலுத் தப்பட்டுள்ளது. யாருடைய உதவி யும் இல்லாமல் இதை செய்தி ருக்க முடியாது. அவரது இறப் பில் வலுவான சந்தேகங்கள் இருப் பதால் விசாரணை நடத்தி உண் மையை வெளிக் கொண்டுவர வேண் டும் இவ்வாறு அவர்கள் கூறினர்.

சரவணனின் தந்தை கணேசன் கூறும்போது, “சரவணன் உயிரிழந்த சம்பவம் வெறும் பரபரப்புச் செய்தி அல்ல. அவர் நிச்சயம் தற்கொலை செய்திருக்கமாட்டார். அவரது மரணத்தில் மறைந்துள்ள உண்மையை கண்டுபிடித்து, மத்திய, மாநில அரசுகள் நட வடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x