

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டையில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆர்.கே.நகர் தொகுதியில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து விலைக்கு வாங்க நினைக்கின்றன. தமிழக அமைச் சர் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது வேதனை. அதிமுக ஆட்சி தமிழகத்தில் தொடர்வதை மக்கள் விரும்பவில்லை.
தேர்தல் விதிமுறைகளை மீறும் கட்சிகள் மற்றும் பணப் பட்டுவாடா செய்யும் கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் நட வடிக்கை எடுக்க வேண்டும். டெல்லியில் போராட்டத்தில் ஈடு பட்டுள்ள விவசாயிகள் தங்களது உடல்நிலையை கருதி போராட் டத்தை கைவிட வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட தமாகா விரும்புகிறது. தற் போதைய சூழலில், ஓபிஎஸ் அணிக்கு மக்கள் ஆதரவான நிலையில் உள்ளதால், தமாகா மாவட்ட நிர்வாகிகளின் கருத் தின் அடிப்படையிலேயே, ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம் என்றார்.