

பன்றிக்காய்ச்சலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருவதால் பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கைகழுவுதல் குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சியைத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ''பன்றிக்காய்ச்சலைக் கட்டுப்படுத்தத் தேவையான டாமி புளூ மாத்திரைகள், மருந்துகள், பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவை அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளன. காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து மருத்துவரை சந்திக்க வேண்டும். பதட்டமும், பீதியும் தேவையில்லை.
எல்லா காய்ச்சலும் பன்றிக்காய்ச்சல் அல்ல. பன்றிக்காய்ச்சலுக்கு உரிய 14 லட்சம் டாமி புளூ மாத்திரைகள், 21 ஆயிரம் மருந்துகள், 2 லட்சம் தடுப்பூசிகள், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளன'' என்றார்.