

அவிநாசி அருகே பள்ளி வாக னத்தின் சக்கரம் கழன்று சாலை யில் ஓடியது. இந்த சம்பவத்தில் 28 குழந்தைகள் காயமின்றி உயிர் தப்பினர்.
இதுகுறித்து போலீஸார் கூறிய தாவது:
அவிநாசி அருகே குரும்ப பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் 1,400 குழந்தைகள் படிக்கின்றனர். நேற்று காலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குழந்தைகளை ஏற்றிக்கொண்டு, பள்ளிக்கு வேன் திரும்பிக்கொண்டு இருந்தது. துலுக்கமுத்தூர் அருகே வந்தபோது வேனின் பின்பக்க சக்கரம் கழன்று ஓடியது. உடனே, சாலையில் லேசாக சாய்ந்து வாகனம் நின்றது.
வேனில் இருந்த 28 குழந்தை களும் செய்வதறியாது அலறித் துடித்தனர். சம்பவ இடத்துக்கு அப்பகுதி பொதுமக்கள் விரைந்து, வாகனத்தில் இருந்து குழந்தை களை கீழே இறக்கினர். குழந்தைகள் காயம் இன்றி தப்பினர். அவிநாசி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, வேன் ஓட்டுநரை எச்சரித்து அனுப்பினர். இவ்வாறு போலீஸார் கூறினர்.