

ஜல்லிக்கட்டு நடத்துமாறு மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வில்லை என்று லட்சிய திராவிட முன் னேற்ற கழக தலைவர் டி.ராஜேந்தர் கூறினார்.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி மதுரை மாவட்டம் கரடிக்கல் கிராமத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வந்த டி.ராஜேந்தர் மதுரை அவனியாபுரத்தில் உள்ள அய்யனார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
தமிழர்களின் பாரம்பரிய விளை யாட்டு ஜல்லிக்கட்டு. சில ஆண்டு களாக ஜல்லிக்கட்டு நடைபெறாமல் உள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிமுக எம்பிக்கள் அதிக அளவில் உள்ளனர். ஆனாலும் ஜல்லிக்கட்டு நடத்துமாறு மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்தவில்லை. மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும்.
தமிழக பாஜக தலைவர்களும் பிரதமரை சந்திக்கவில்லை. பிரதமரை சந்தித்து ஜல்லிக்கட்டு குறித்து பேச வேண்டும் என்றார்.