Last Updated : 09 Sep, 2014 08:59 AM

 

Published : 09 Sep 2014 08:59 AM
Last Updated : 09 Sep 2014 08:59 AM

நெல்லை மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் வாபஸ் பின்னணி: பாஜக நிர்வாகிகள் அதிர்ச்சி

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் தேர்தலில், ‘பாஜக வேட்பாளர் ஜி.பி.ஆர்.வெள்ளையம்மாள் விலகியதன் பின்னணி அதிர்ச்சி அளிப்பதாகவும், அதிகார பலமும், பண பேரமுமே இத் தேர்தலில் வெற்றி பெற்று இருப்பதாக’ பாஜக நிர்வாகிகள் குற்றம்சாட்டினர்.

இம்மாகராட்சி தேர்தலில் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்த இந்து மக்கள் கட்சி, ஜனநாயக மக்கள் கட்சி, தேசிய லீக் கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட 7 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டபோதே சர்ச்சை தொடங்கியது. வேட்பு மனு தள்ளுபடியில் பாரபட்சம் காட்டப்பட்டதாக கடந்த 4-ம் தேதி திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத் தினர்.

நேரடி போட்டி

அதிமுக வேட்பாளர் இ. புவனேஸ் வரிக்கும், பாஜக வேட்பாளர் வெள்ளையம்மாளுக்கும் நேரடி போட்டி ஏற்பட்டது. அதிமுக-வினர் வழக்கம்போல் தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பு காட்டி வந்தனர். அமைச்சர்கள் எடப்பாடி பழச்சாமி, ஆர்.பி.உதயகுமார், கோகுல இந்திரா, வைத்திலிங்கம், பி.செந்தூர்பாண்டியன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலரும் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தினர்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் கள் எதிர்த்து போட்டியிடுவோருக்கு தோல்விதான் என்று நாசுக்காக சுட்டிக் காட்டியிருந்தனர்.

திடீர் திருப்பம்

‘அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா வரும் 14-ம் தேதி பிரச்சாரம் செய்வார்’ என்று அறிவிக்கப்பட்டிருந்தது. திடீர் திருப்பமாக திங்கள் கிழமை வெள்ளையம்மாள் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றது மாநில அளவில் பாஜக நிர்வாகி களை அதிர்ச்சி அடைய வைத் துள்ளது.

இதுகுறித்து திருநெல்வேலி கிழக்கு மாவட்ட பாஜக அமைப்புச் செயலாளர் டி.வி.சுரேஷ் கூறியதாவது:

’’திருநெல்வேலி மாநகராட்சி மேயர் தேர்தலில் பணநாயகம் வென்றிருக்கிறது. ஜனநாயகம் தோற்றிருக்கிறது. இத் தேர்தலில் ஆரம்பத்திலிருந்தே எதிர்கட்சிகள் போட்டியிடக்கூடாது என்று அதிமுகவினர் திட்டமிட்டு செயல்பட்டுவந்தனர். பாஜக வேட்பாளரை அதிமுக நிர்வாகிகள் தொழில் நிமித்தமாக மிரட்டினர். இறுதியில் அதிகார பலமும், பண பேரமும் வென்றிருக்கிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் 37 இடங்களில் வெற்றிபெற்ற அதிமுக இத்தேர்தலில் மக்களை சந்திக்க பயந்து குறுக்குவழியில் வெற்றிபெற்றிருக்கிறது.

இது ஜனநாயகத்தில் மோசமான முன் உதாரணமாகும் ’’ என்றார் அவர்.

பணபேரத்துக்கு வேட்பாளர் அடிபணிந்துவிடக்கூடாது என்ப தால் கடந்த வெள்ளிக்கிழமை நாகர்கோவிலில் மத்திய இணை யமைச்சர் பொன்.ராதாகிருஷ்ண னிடம் ஆசிபெற சென்ற வேட் பாளர் வெள்ளையம்மாள் அவரது கண்காணிப்பிலேயே தங்கவைக் கப்பட்டிருந்திருந்தார்.

மனுத்தாக்கல் செய்து சென்றவர் பின்னர் பிரச்சாரத் துக்குகூட வரவில்லை. இதனால் பண பேரத்துக்கும், மிரட்ட லுக்கும் வேட்பாளர் அடிபணிந்து விடக்கூடும் என்ற அச்சம் பாஜக நிர்வாகிகளிடையே கடந்த 3 நாட்களாகவே இருந்துவந்தது.

திங்கள்கிழமை பாஜக-வினர் எதிர்பார்க்காத வகையில் வெள்ளையம்மாள் போட்டியில் இருந்து விலகியிருக்கிறார். அதிமுக தரப்பில் இருந்தும், வேட்பாளர் தரப்பில் இருந்தும் கோடிகளில் பேசப்பட்ட பண பேரத்தின் இறுதி கட்டமாகவே வேட்புமனு வாபஸ் படலம் அரங் கேறியதாக பாஜக வட்டாரத்தில் பரவலாகவே பேசப்படுகிறது.

‘பாஜக வேட்பாளர் மிரட்டப் பட்டதாக’ பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ள புகார்குறித்து, திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் எஸ். முத்துக் கருப்பனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

அகில இந்திய அளவில் ஆளுங்கட்சியான பாஜக வேட் பாளரை மிரட்ட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. திருநெல்வேலி மாநராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையம், பாளையங்கோட்டையில் 1 லட்சம் சிறுபான்மையினர் வாக்குகள் உள்ளன.

ஒட்டுமொத்தமாக அந்த வாக்குகள் எங்களுக்கு கிடைக்கும் நிலையுள்ளது. எங்களை எதிர்த்து போட்டியிடுவோருக்கு டெபாசிட் கிடைக்காது என்ற நிலையுள்ளபோது, நாங்கள் பாஜக வேட்பாளரை மிரட்ட வேண்டிய அவசியம் என்ன? அதிமுக-வில் சேர பாஜக வேட்பாளர் வெள்ளையம்மாள் விருப்பம் தெரிவித்து என்னிடம் பேசினார்” என்றார் அவர்.

இதுகுறித்து வெள்ளையம் மாளை தொடர்புகொண்டபோது, அவரது அலைபேசி எண் நாள் முழுக்க சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x