

உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள திமுக தயாராக இருப்பதாகவும், அதை எதிர்கொள்ள பயந்து அதிமுக அரசு சட்டத் திருத்தங்களை கொண்டு வருவதாகவும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சித்துள்ளார்.
நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க நேற்று கோவை வந்த டி.கே.எஸ்.இளங்கோவன், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சட்டப்பேரவையில் திமுக மிகப் பெரிய எதிர்க்கட்சியாக இருந் தாலும்கூட, அதிகமாகப் பேசிவிடக் கூடாது, அரசு மீது குறை, குற்றச் சாட்டுகளை கூறிவிடக்கூடாது என்பதில் அதிமுகவினர் தெளிவாக உள்ளனர். திமுகவினரை பேச அனுமதிக்கும்போது, தங்களிடம் உள்ள பதில் சரியாக இருந்தாலும், தவறாக இருந்தாலும் குறுக்கிட்டுப் பேச நினைக்கின்றனர். முக்கியப் பிரச்சினைகளை எழுப்புவதை தடுக்கின்றனர். குறிப்பாக 3 கண் டெய்னர்களில் எடுத்துச் செல்லப் பட்ட ரூ.570 கோடி பிரச்சினை குறித்து இந்த அரசு அறிக்கைகூட வெளியிடவில்லை. அதுகுறித்து பேசவும் அனுமதி மறுக்கப்படுகிறது.
திமுக தலைவர் கருணாநிதி சக்கர நாற்காலியில் சட்டப்பேரவை வந்து செல்ல அரசால் இடம் ஒதுக்க இயலும்.
முதல்வரின் உடல்நலம் கருதி, அவருக்கு இரண்டு இட இருக்கை ஒதுக்கியிருக்கும் போது, முன்னாள் முதல்வரின் வசதிக்கேற்பவும் இடம் ஒதுக்க வேண்டும். மனமிருந்தால் மார்க்கம் இருக்கும். அவர்களுக்கு மனம் இல்லை எனக் கருதுகிறேன்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டப் பேரவை உறுப்பினர், பேரவை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உரிய வசதிகள் செய்து கொடுக்காதது சட்டப்பேரவைத் தலைவரின் தவறான அணுகுமுறை, அது கண்டிக்கத்தக்கது.
4 நாட்களுக்கு முன்பு, தமிழகத் தில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்ப தாக ஆளுநர் உரையில் கூறினார். ஆனால் சென்னையில் பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதே உண்மையான சட்டம் ஒழுங்கு நிலைக்கான சாட்சி.
அதேபோல மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு கண்பார்வை பறிபோயிருப்பது அரசின் மிகப்பெரிய அலட்சியத் தைக் காட்டுகிறது.
தருமபுரியில் தவறான சிகிச்சை யால் குழந்தைகள் இறந்த சம்ப வம், ரூ.300 லஞ்சம் கேட்டு, ஸ்ட்ரெச்சர் கிடைக்காமல் ஒரு இளைஞர் இறந்த சம்பவம் என பல நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. தமிழக மருத்துவத்துறை, மருத்துவ மனைகளின் செயல்பாடுகள் இந்த நிலையில்தான் உள்ளன.
ஒட்டுமொத்தமாக, அதிமுக அரசு முதல்வருக்காக இயங்கும் அரசாகவே இருக்கிறது. மாநிலத் துக்கானதாகவும், மக்களுக்கான தாகவும் கடந்த 5 ஆண்டிலும் இந்த அரசு இல்லை, இப்போதும் இருப்பதாகத் தெரியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.