

மேட்டூர் அருகே காணாமல் போன 6 வயது சிறுமி தான் வசித்து வந்த தெருவில் உள்ள மற்றொருவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அந்த வீட்டில் இருந்த 17 வயது சிறுவனை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் கொளத்தூரை அடுத்த தெலு கனூரைச் சேர்ந்தவர் மீன் வியாபாரி குருநாதன் என்கிற ராஜா(30). இவரது மகள் தர்ஷினி(6). இவர் அரசுப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை தர்ஷினியை அழைத்துக்கொண்டு கடை வீதிக்குச் சென்ற ராஜா, பொருட்களை வாங்கி தர்ஷினி யிடம் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
பின்னர் வீடு திரும்பிய ராஜா தனது மகள் வீட்டில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தனது மனைவியுடன் சேர்ந்து வீதி, வீதியாகத் தேடியும் மகளை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. மகள் தர்ஷினியை காணவில்லை என கொளத்தூர் போலீஸில் புகார் செய்தார்.
நேற்று காலை மேட்டூர் டிஎஸ்பி நடராஜன், கொளத்தூர் இன்ஸ்பெக்டர் சிவகுமார் உள் ளிட்ட போலீஸார் ராஜாவின் வீடு இருந்த வீதியில் விசாரணை நடத்தினர். அப்போது அப்பகுதி யைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
சிறுவனின் வீட்டுக்குள் சென்று போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, பெரிய அண்டாவில் தர்ஷினி சுருட்டி வைக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமியின் உடலில் ரத்தக் கறைகள் இருந்தன. மேலும் வீட்டில் நடந்த சோதனையில் பூஜை அறையில் சில எலுமிச்சை பழங்கள் வைக்கப்பட்டு ஆங்காங்கே மஞ்சள், குங்குமம் சிதறிக் கிடந்ததோடு, நரபலி பூஜை நடத்தப்பட்டது போன்ற தோற்றம் இருந்தது.
தொடர்ந்து விசாரணை
எஸ்எஸ்எல்சி தேர்வில் தோல்வியடைந்த அந்த சிறுவன் வேலைக்குச் செல்லாமல் சுற்றி வந்துள்ளார். மேலும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தபோது, சிறுமி கூச்ச லிட்டதால், அவரை கழுத்தை நெரித்து சிறுவன் கொலை செய்து இருக்கலாம் என போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து சிறுவனை கைது செய்த போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.