

வங்கிகளில் வேளாண் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி யில் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிப் பது குறித்த ஆலோசனைக் கூட் டம் கோயம்பேடு சந்தையில் சில தினங்களுக்கு முன்பு நடை பெற்றது. இதில் கோயம்பேடு சந்தையில் உள்ள பல்வேறு காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் பங்கேற்று ஆலோசனை நடத்தி னர். இதில் நாளை, கோயம்பேடு சந்தையில் காய்கறி சந்தை வளா கத்தில் உள்ள அனைத்து காய்கறி கடைகளையும் மூடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோயம் பேடு மலர், காய், கனி வியாபாரி கள் நலச்சங்கத் தலைவர் எம்.தியாகராஜன் கூறும்போது, ‘‘எங்க ளுக்கு வாழ்வளிக்கும், விவசாயி களின் போராட்டத்துக்கு ஆதரவ ளிக்கும் விதமாக இந்த முடிவை எடுத்திருக்கிறோம். இவர்கள் சிறப்பாக இருந்தால்தான் எங்கள் வியாபாரம் செழிக்கும். அதனால் வரும் 25-ம் தேதி கோயம்பேடு சந்தையில் உள்ள அனைத்து காய்கறி கடைகளும் மூடியிருக்கும்’’ என்றார்.