Published : 06 Feb 2017 03:14 PM
Last Updated : 06 Feb 2017 03:14 PM

ஜெயலலிதா உடல் பதப்படுத்தப்பட்டது உண்மையே; கால்கள் அகற்றப்படவில்லை: அப்போலோ புதிய விளக்கம்

உடல்நலம் தேறிவந்த ஜெயலலிதா உயிரிழந்தது எப்படி?- லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே விளக்கம்

ஜெயலலிதா உயிரிழந்தது எப்படி என்பது குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே விளக்கம் அளித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர ணம் குறித்து தொடர்ந்து பல்வேறு தகவல் கள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலை யில், அவருக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவமனை டாக்டர் ரிச்சர்ட் பீலே, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்னை வந்திருந்தார். நுங்கம்பாக்கத் தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நிருபர்களை அவர் நேற்று சந்தித்தார். அப்போது ஜெயலலிதா மரணம் குறித்து அவர் விளக்கிக் கூறியதாவது:

ஜெயலலிதா முதலில் காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு காரணமாகத்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் சுயநினைவுடன் இருந் தார். அடுத்தடுத்த மருத்துவப் பரிசோதனை யில் உயர் ரத்தஅழுத்தம், ரத்தத்தில் பாக்டீரியா தொற்று, உடலில் அளவுக்கு அதிகமான சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருந்தது. செப்டிசீமியா, நுரையீரல் மற்றும் சிறுநீர் தொற்று பாதிப்பும் இருந்தது. செப்டிசீமியா இருந்ததால், அவர் சில நாட்கள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற வேண்டும் என்று தெரிவித்தேன்.

செப்டிசீமியா ஏற்பட்டதால் அவரது உடல் உறுப்புகள் பாதிப்படைந்தது. தீவிர சிகிச்சையால் அவருக்கு இருந்த அனைத்து நோய்களும் கட்டுப்படுத்தப் பட்டது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற் பட்டதால், செயற்கை சுவாசத்துக்காக அவரது தொண்டைப் பகுதியில் டிரக்கி யோஸ்டமி கருவி பொருத்தப்பட்டது. பிசியோதெரபி சிகிச்சை மூலம் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற் பட்டன. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணர்ந்திருந்தார். யார் வந்திருக் கிறார்கள் என்பதை கடிதத்தில் எழுதி அவரிடம் கொடுப்போம். யாரை சந்திப்பது என்பது குறித்து அவரே முடிவு செய்தார்.

உடல்நிலை நன்றாக தேறிவந்த நிலை யில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் அவருக்கு எக்மோ, சிபிஆர் உள்ளிட்ட உயர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மாரடைப்பு மட்டும் ஏற்படாமல் இருந்திருந்தால், அவர் பூரண குணமடைந்து ஒரு வாரத் தில் வீடு திரும்பியிருப்பார். அவருடைய மரணத்தில் மர்மம் எதுவும் இல்லை. உடல்நலக்குறைவால் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் ஒருவரின் புகைப்படங்களை வெளியிடுவது சரியான நடைமுறை அல்ல. அது அவரது தனிப்பட்ட விஷயம். மேலும் இது மருத்துவமனை சார்ந்த விஷயம். அவர் சிகிச்சைப் பெற்று வந்த அறையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை. அதனால் அவர் சிகிச்சையில் இருந்தபோது அவரு டைய புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியிடப்படவில்லை. அப்படி வெளியிடுவதும் நியாயமாக இருக்காது.

ஜெயலலிதாவை முதலில் லண்டனுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. அதற்கு அவரது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. லண்டனுக்கு அழைத்துச் சென்றால் உயி ருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருந் தது. மேலும் வெளிநாடு சென்று சிகிச்சை பெற அவரும் விரும்பவில்லை. அதனால் அவரை லண்டனுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டது.

அவரிடம் இறுதியாக எப்போது பேசி னேன் என்று எனக்கு சரியாக தெரிய வில்லை. ஆனால் நான் அவரிடம் பேசியிருக்கிறேன். எனது குடும்பத்தைப் பற்றியும் அவர் நலம் விசாரித்துள்ளார். நான் இங்கு இருந்த நாட்களில் சசிகலா வைப் பார்த்து இருக்கிறேன்.

இவ்வாறு டாக்டர் பீலே தெரிவித்தார்.

அப்போலோ மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு மூத்த டாக்டர் பாபு ஆப்ரஹாம்:

மறைந்த முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி இரவு 10.30 மணி அளவில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். அவருக்கு அதிதீவிர சிகிச்சை, உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

ஆனால், டிசம்பர் 5-ம் தேதி மாலை 5 மணி அளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அன்று இரவு 11.30 மணிக்கு அவர் உயிரிழந்தார். அவரைக் காப்பாற்றும் முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்துவிட்டன.

மொத்தம் 75 நாட்கள் மருத்துவமனை யில் இருந்த அவருக்கு உலகத் தரத்தி லான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அவர் டி.வி. பார்த்தார், உணவுகள் சாப்பிட் டார் என்பதெல்லாம் உண்மை. அவருக்கு டாக்டர்கள் சுதந்திரமாக சிகிச்சை அளித் தனர். எந்தவிதமான பதற்றமோ, நிர்பந்தமோ டாக்டர்களுக்கு ஏற்படவில்லை. ஜெய லலிதாவின் உடல்நிலை பற்றி தினமும் சசிகலா, தம்பிதுரை, தலைமைச் செயலாளர் மற்றும் உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பி.பாலாஜி:

தமிழகத்தில் நடந்த 3 தொகுதி இடைத்தேர்தலின்போது, அதிமுக வேட் பாளர்களின் வேட்பு மனுவில் ஜெயலலிதா வின் கைவிரல் ரேகை பெறப்பட்டது. அவரது கையில் வீக்கம் இருந்தது. மேலும் கையில் மருந்துகள் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. அதனால் அவரிடம் இருந்து ரேகை பெறப்பட்டது. அப்போது அங்குதான் இருந்தேன். ரேகை பெறப்பட் டதை நான்தான் உறுதி செய்தேன். அதற்கு சாட்சியாக டாக்டர் பாபு இருந்தார்.

ரேகை வைக்கும்போது, அவர் சுய நினைவோடுதான் இருந்தார். நான்தான் டாக்டர் பாலாஜி என்று அவரிடம் அறிமுகம் செய்துகொண்டேன். அவரும் புரிந்துகொண்டு சைகை செய்தார்.

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது, அங்கு டாக்டர் ரமேஷ் உடன் இருந்தார். உடனடியாக ஜெயலலிதாவை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு சென்று தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டன. தற்போது டாக்டர் ரிச்சர்ட் பீலே ஒரு நிகழ்ச்சிக்காக சென்னை வந்தார். வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற் காக இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறுகிறது. இந்த பத்திரிகையாளர் சந்திப்பு தமிழக அரசின் சார்பில் நடைபெறுகிறது.

ஜெயலலிதாவின் கால்கள் எடுக்கப்பட வில்லை. அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்படவில்லை. அவருக்கு உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை எதுவும் செய்யவில்லை. அவருடைய சிகிச்சைக்கு மொத்தம் சுமார் ரூ.5.5 கோடி செலவானது. அதற்கான ரசீது அவரது உறவினர்களுக்கு அனுப்பப்பட்டது. அந்த உறவினர்கள் யார் என்பதை அப்போலோ மருத்துவமனை சிஇஓதான் தெரிவிக்க வேண்டும்.

தமிழக ஆளுநர் 3 முறை அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார். முதல்முறை வந்தபோது அவர் ஜெயலலிதாவை சந்திக்கவில்லை. அவருடைய உடல் நிலை குறித்து, மருத்துவமனை தரப்பில் விளக்கப்பட்டது. 2-வது முறை வந்தபோது, தீவிர சிகிச்சைப் பிரிவின் கண்ணாடி வழியாக ஜெயலலிதாவை அவர் பார்த்தார். ஜெயலலிதா 5-ம் தேதிதான் இறந்தார். அதற்குமுன் அவர் உயிரிழக்கவில்லை என்பது உண்மை.

சென்னை மருத்துவக் கல்லூரி உடற்கூறுயியல் துறை இயக்குநர் டாக்டர் சுதா சேஷய்யன்:

மறைந்த ஜெயலலிதாவின் உடல் பதப்படுத்தப்பட்டது உண்மைதான். விஐபிக்கள் உயிரிழந்தால், உடல் பொதுஇடத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும். ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வருவதால் மாசு ஏற்படும். உடலுக்கு பாதிப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி விடக்கூடாது. அதனால் அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் உடல் பதப்படுத்தப்படுகிறது.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் இறந்தபோதுகூட, அவரது உடல் பதப்படுத்தப்பட்டது. 5.5 லிட்டர் திரவம் செலுத்தி உடல் பதப்படுத்தப்பட்டது. ஜெயலலிதாவுக்கு டிரக்கியோஸ்டமி கருவி உதவியுடன் செயற்கை சுவாச மும் அளிக்கப்பட்டு வந்தது. அதனால் அவரது உதடு தடிமனாக மாறியது. அவரது கன்னத்தில் இருந்த புள்ளி களுக்கு, அவர் நீண்ட நாட்கள் மருத் துவமனையில் சிகிச்சையில் இருந்ததே காரணம். அந்த புள்ளிகள் பார்ப்பதற்கு சிறிய அளவிலேயே இருந்தன. புகைப் படங்களில் அந்த புள்ளிகள் பெரிதாக காட்டப்பட்டுள்ளது.

டிசம்பர் 5-ம் தேதி இரவு 11.35 மணிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோர் என்னை செல்போனில் தொடர்புகொண்டு ஜெய லலிதா இறந்த தகவலை தெரிவித்தனர். நாங்கள் சென்று நள்ளிரவு 12.20 மணிக்கு அவரது உடலை பதப்படுத்தினோம். 15 நிமிடங்களில் அவரது உடல் பதப் படுத்தப்பட்டது.

பேட்டி முடிந்ததும் டாக்டர் ரிச்சர்ட் பீலேவை நிருபர்கள் சூழ்ந்துகொண்டு சரமாரியாக கேள்வி கேட்டனர். இதனால் கூச்சல் குழப்பமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதையடுத்து ரிச்சர்ட் பீலேவை மற்ற டாக்டர்கள் சமையல் அறை வழியாக வெளியே அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வைகோ விசிட்டிங் கார்டு வாங்கியது உண்மை

மருத்துவமனையில் இருந்தபோது அவரை சந்திக்க சென்ற வைகோ, டாக்டர் ரிச்சர்ட் பீலேவிடம் விசிட்டிங் கார்ட் பெற்றதாக தெரிவித்திருந்தார். இதுபற்றி டாக்டர் ரிச்சர்ட் பீலேவிடம் கேட்டபோது, ‘மருத்துவமனைக்கு வந்து வைகோ தன்னை சந்தித்து விசிட்டிங் கார்ட் பெற்றார். அது உண்மை என தெரிவித்தார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x